Monday, 30 April 2012

பாபர் மசூதி





டிசம்பர் ஆறு 6
அது கூறும்
ஒரு இரத்த ஞாயிறின் வரலாறு.


பாபரியே...
நீ இல்லாத ஒருவனுக்காய் 
இடம் பெயர்க்கப்பட்டாய் 
இன்று இருப்போர் மனதில் எல்லாம் 
இடம் பிடித்துக் கொண்டாய்



Saturday, 28 April 2012

ஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்

குர்ஆன் கூறும் கருவியல்: – தொடர்-1 ஆண் அல்லது பெண் குழந்தை – ஆணின் உயிரணுவே காரணம்

“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)

ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கனவனின் உயிரணுவே காரணம்: மனைவி காரணமல்ல. என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை வசனம் கூறியிருப்பது குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும், ஆணின் விந்தணுவில் X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும் என்பதையும் X என்பது பெண்ணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் Y என்பது ஆணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் நாம் படித்திருக்கிறோம்.

இப்போது மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள் இன்றைய அறிவியலுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றது என்பதைச் சற்று விளக்கமாகப் பாப்போம்.

X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)

X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)

பெண்ணின் சினை முட்டை வெறும் X குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் கர்ப்பப் பையினுள் செலுத்தப்படும் விந்தணுக்களில் X குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் Y குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு உயிரணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு X குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு Y குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.

பெண்ணின் சினை முட்டை X ஆக மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்கள் தாம் X ஆகவோ அல்லது Y ஆகவோ இருக்கிறது. அதாவது கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்களுக்களே சினை முட்டையுடன் சோந்து பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகின்றது.

இதை இப்படியும் புரிந்த்துக் கொள்ளலாம்.

பெண்ணின் சினை முட்டையுடன் – கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் பெண் குழந்தையாக உருவாகிறது.
பெண்ணின் சினை முட்டையுடன் – கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் ஆண் குழந்தையாக உருவாகிறது.
மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் இந்தியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது, பெண்ணின் சினை முட்டையல்ல. இன்னும் சற்று விளக்கமாக கூறுவதென்றால் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற ஜோடிகளை உருவாக்குவது பெண்ணின் கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் போதுள்ள இந்தியத் துளியைக் கொண்டே என்பது நன்கு புலப்படுகின்றது.

இப்போது மேற்கண்ட வசனங்களை ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)

20 ம் நூற்றாண்டின் இந்த அரிய கண்டுபிடிப்பை 7 ம் நூற்றாண்டிலேயே கூறிய அல்லாஹ்வின் திருமறையின் அறிவியல் அற்புதங்களை உலகிற்கு எடுத்துக்கூறுவது நமது கடமையன்றோ?

இன்றும் நம்மில் சிலர் தம் மனைவி பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கிறாள், ஆண் குழந்தையே பெற்றெடுப்பதில்லை என்று குறை கூறுகிறாகள். குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ ஆகுவதற்கு தம்முடைய உயிரணுவே காரணம் என்பதை அறியாததே இதற்குக் காரணம். இவர்கள் பின் வரும் இறைவசனங்களைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளாகள்.

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)

உறவுகளைத் துண்டிக்காதீர்!

ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல்: புகாரீ
நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ
நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.
நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

Friday, 27 April 2012

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

ௌலவி அலி அக்பர் உமரி

‘இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி எண்: 1082)

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானனாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபட வில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

உணவு உடை

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, ‘நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி) நூல்: அபூதாவூத் 1830)

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி ஸல் அவர்கள் கட்டளையிடுகிறார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள். அத்துடன் மட்டும் நபி ஸல் அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு. அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56)

சுய மரியாதையைப் போற்றுதல்

மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

‘நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின ஸம்ஆ (ரலி), நூல்: புஹாரி 4942, 5204)

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்ற இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக ‘பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுய மரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள். அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும்.

மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயாந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது. இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃ க்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட அயிஷா (ரலி) எழுந்து நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின் தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகிறார்கள். ‘பகீஃ க்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்’ என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 1619)

இங்கு நபி ஸல் அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதற்கு பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ ‘பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தமது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைபிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதி விட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புஹாரி 1119)

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ‘நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), ‘அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’ என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ‘உனக்குப் போதுமா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘அப்படியானால் செல்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி, எண்: 950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வை பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணிகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனைவியின் உணவு, உடை அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை போடுவோமாக!

நன்றி: இஸ்லாமியதாவா.காம்

குழந்தைகளைக் கொஞ்சுவோம்!

அல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. வணக்க வழிபாடுகள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் - அதல்லாத வழிகளில் அடைய முடியாது என்று நிலவி வந்த வறட்டுச் சிந்தனை வழியனுப்பி வைக்கப்பட்டது.பெற்ற குழந்தைகள் மீது நாம் பொழிகின்ற அன்பு மழையில், பரிமாறிக் கொள்கின்ற பாச அலைகளில், அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் என்று வளமான சிந்தனை வளர்க்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி), “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 5997இந்த ஹதீஸ்கள், உனது குழந்தையின் பூ முகத்தில் நீ பதிக்கின்ற முத்தங்கள் இறைவனின் அருளைப் பெற்றுத் தரும் என்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு குழந்தைகளை முத்தமிடாதவரது இதயத்தில் அன்பை அல்லாஹ் எடுத்து விட்டான், அவருக்கு அல்லாஹ்வின் அன்பு கிடைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் காண முடிகின்றது.

தொழுகை, தஸ்பீஹ், திக்ர், நோன்பு அகிய வணக்கங்கள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்ற எண்ணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தகர்த்தெறிகின்றார்கள். அதனால் தான் தொழுகை என்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் நடத்துகின்ற உரையாடல் என்றிருப்பினும் குழந்தையின் அழுகைக் குரல் காதில் விழுந்து விட்டால் அதை அப்படியே சுருக்கி விட்டிருக்கின்றார்கள் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

“நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (என்னைப் பின்பற்றித் தொழும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), நூல் : புகாரி 707, 709, 710

சோறு கொடுத்தால் சொர்க்கம்தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஒர் எழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார். அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம் கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது.அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்” என்றோ அல்லது “அப்பெண்ணுக்கு நரகிலிருந்து விடுதலை அளித்து விட்டான்” என்றோ கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4764)

பாருங்கள்! தனக்கின்றி தான் பெற்ற குழந்தைக்கு வழங்கும் அந்தத் தாய்க்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்கின்றார்கள். அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குக் காட்டிய கருணைக்காக – ஊட்டிய பேரீச்சம்பழங்களுக்காக இறைவன் அவரை சுவனத்திற்குக் கொண்டு செல்கின்றான்.

இன்று நம்முடைய புண்ணியமிகு தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்குக் கூட வருத்தமாக உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் இரண்டு ஆண்டுகள் தாய்ப் பாலூட்டுமாறு கட்டளையிடுகின்றான். இதை இந்தத் தாய்மார்கள் பொருட்படுத்துவது கிடையாது. பாலூட்டுவதால் தங்கள் மேனி கட்டழகு கெட்டு விடும் என்று கற்பனை செய்து தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய மனிதாபிமானக் கடமையைச் செய்யத் தவறி விடுகின்றார்கள்.

நம்மைச் சுற்றி வலம் வருகின்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாங்கள் ஈனுகின்ற குட்டிகளுக்குப் பால் கொடுக்கத் தவறுவதில்லை. அனால் மனித இனத்தைச் சேர்ந்த இந்தப் புனிதவதியோ பெற்ற பிள்ளைக்கு ‘புட்டி’ பாலைக் கொடுத்து, அந்தப் பால் மாவில் கலந்துள்ள இரசாயனக் கலவையின் மூலம் குடலில் கோளாறு எற்பட வழிவகுக்கின்றாள்.

ஒரு குழந்தை அரை மணி நேரம் குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வகுக்கின்றாள். இது மனிதப் பண்பா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.


நாகரீக மோகத்தில் இராப் பகலாய் பொருளீட்டுவதற்காகப் பாடுபடுகின்ற இயந்திர வாழ்க்கையில் தாய் தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளைக் குழந்தைக் காப்பகங்களில் விட்டு விடுகின்றனர். அல்லது உறவினர் வீட்டில் விட்டு விட்டு அரபு நாட்டில் ஐக்கியமாகி விடுகின்றார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின் பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக் பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து விடுகின்றது.
இப்படிப்பட்ட படு மோசமான நிலைகளை விட்டு நீங்கி, குழந்தைகளுடன் பாசப் பிணைப்புடன் வாழ வேண்டும். குழந்தைகள் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அன்பு அரவணைப்பை நாமும் காட்ட வேண்டும்.

குழந்தைகளுடன் இரண்டறக் கலந்து விடுதல்

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூ உமைர் என்று அழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகின்றேன். நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்தால்), “அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கின்றது?” என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 6203

ஹராம் ஹலாலைக் கற்றுக் கொடுத்தல்ஹஸன் (ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “சீ, சீ,” எனக் கூறி துப்பச் செய்து விட்டு, “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1491

கையிலெடுத்துக் கொஞ்சுதல்

நபி (ஸல்) அவர்கள் என்னையும், ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கின்றேன். நீயும் நேசிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி), நூல் : புகாரி 3735

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப் பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதை சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள். அறிவிப்பவர் : அயிஷா (ரலி), நூல் : புகாரி 2223

குழந்தைகளின் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் போல் அன்பு காட்டி, அரவணைத்து, அவர்களுக்கு நேர்வழியைக் கற்றுக் கொடுத்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

வறுமையின் வாசலில் வசந்தம்!!!

மதீனாவில் அது ஒரு பஞ்சக் காலம். எங்கும் பட்டினி. வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஒரு பெண் தன் இரு பெண் குழந்தைகளுடன் ஒரு நாள் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து தங்கள் பசிக்கு ஏதாவது தருமாறு கேட்டாள்.
விசுவாசிகளின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் வீடு முழுவதும் தேடினார் – வந்த விருந்தாளிகளுக்கு ஏதாவது கொடுக்க! ஒன்றும் கிடைக்கவில்லை. அன்னைக்கு அளப்பரிய சங்கடம். மீண்டும் தேடினார். இறுதியில் மூன்று பேரீச்சம் பழங்களைக் கண்டெடுத்தார்.

“இதனைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை” என்று கூறி அந்த மூன்று பேரீச்சம் பழங்களையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் அன்னையரின் அன்னை.

பசியில் எரிகின்ற மூன்று வயிறுகளுக்கு மூன்றே மூன்று பேரீச்சம் பழங்கள்!

ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குழந்தைக்குக் கொடுத்து விட்டு அந்தப் பரிதாபத் தாய் ஒரு பழத்தை தன் வாயில் போட்டாள். யானைப் பசிக்கு சோளப்பொறி போல கிடைத்த ஒரு பேரீச்சம் பழத்தை உடனே உண்டு விட்டு பசியடங்காமல் தாய் முன் கை நீட்டின அந்த இரண்டு பிஞ்சுகளும்.

உடனே அந்தத் தாய் தன் வாயிலிருந்து அந்தப் பழத்தை எடுத்து இரண்டாகப் பிய்த்து தன் இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்தாள்!

வறுமையின் பிடியில் இருந்த அந்தக் குடும்பத்தின் தலைவன் வறுமையைப் போக்க துணை நிற்கவில்லை. எனவே இரண்டு பிஞ்சுகளையும் அள்ளிக் கொண்டு அந்தத் தாய் வீதிக்கு வந்தாள். கிடைத்த உணவை அவள் நீதமாகப் பங்கு வைத்தாள். பால் மனம் மாறா பிஞ்சுகள் பசியடங்காமல் கை நீட்டியபொழுது தன் பசியைப் பொருட்படுத்தாது உமிழ்நீர் பட்ட பேரீச்சம் பழத்தைப் பிய்த்து அந்தச் சின்ன வாய்களில் திணித்தாள்.

இந்த நெகிழ்ச்சிமிகு நிகழ்வை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அன்னையரின் அன்னையாம் ஆயிஷா நாயகி(ரலி).

நேசமிகு நபியவர்கள் வீட்டுக்கு வந்தபொழுது நெஞ்சைப் பிழியும் இந்த நிகழ்வைக் கூறினார் அன்னை ஆயிஷா (ரலி). அருமை நாயகம்(ஸல்) அவர்கள் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்கள்:

“அந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து அல்லாஹ் அவளை நரகத்தை விட்டும் காப்பாற்றி விட்டான்.”
பலவீனமும், வறுமையும் ஒன்று சேரும்பொழுது நன்மையின் வாயில்கள் திறந்ததைத்தான் நாம் இங்கே கண்டோம். மூன்று பேரீச்சம் பழங்களைக் கொண்டு பலவீனமான அந்தத் தாயால் அற்புதம் நிகழ்த்த முடிந்தது. பலவீனர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்:

“உங்களில் ஒருவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அதனைக் குழி தோண்டிப் புதைக்காமல், ஏசாமல், ஆண் குழந்தைகளுக்கு அவளை விட முன்னுரிமை கொடுக்காமல் அழகிய முறையில் வளர்த்தெடுத்தால் அவருக்கு சுவர்க்கம் நிச்சயம்.” (ஆபூதாவூத்)
மூலம்:தேஜஸ் மலையாள நாளிதழ் –

Thursday, 26 April 2012

புகையை பற்றிய சில உண்மைகள்

இதய நோய்களுக்குபகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.

4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.

6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.

7. உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.

8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம்.

மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.

9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது முதலே “Passive Smoking” என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.

10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும்.

11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட்(Packet) புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட்டை புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்களை ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.

12. 20 வயது முதல் சுமார் 40 வயது வரை தினமும் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்.

ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டி

சில வாரங்களுக்கு முன் அமேசான் iCloud Drive சேவையை வெளியிட்டபோதே, அவர்கள் குளிகைக் கணினியைத் தயாரித்துக்கொண்டு இருக்கலாம் என்பதை யூகித்தேன். குளிகை தயாரிக்கும் திட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அமேசான், இன்னும் சில மாதங்களில் குளிகை வெளியிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும் என்று பரவலாகப் பேசப் பட்டாலும், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம்?

முக்கியமாக, விலை! இந்தக் குளிகையை ஐ-பேடைவிடக் குறைவான விலையில் விற்றாக வேண்டும். கணிசமாகக் குறைவான விலை. (அற்புதமாக இருந்த மோட்டரோலாவின் Xoom குளிகை பயங்கரத் தோல்வியைச் சந்தித்ததற்கு மிக முக்கியக் காரணம், விலைதான்!) விலை குறைத்து விற்பது என்பது அமேசானுக்குப் பழக்கமான மாடல்தான். அவர்களது கிண்டில் சாதனத்தை நஷ்டத்துக்கு விற்பது என்பது அவர்களது பிசினஸ் பிளான். மின் புத்தகம் மற்றும் பத்திரிகைகள் போன்ற digital content சமாசாரங்களை கிண்டில் பயனீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் சாதன விற்பனை நஷ்டத்தை ஈடு செய்து விடலாம் என்ற திட்டம் சிறப்பாகவே நிறைவேறியதைச் சென்ற இரண்டு ஆண்டுகளில் பார்த்தோம். இதற்கு மாறான திட்டம், ஆப்பிளுடையது. சாதனங்களை விற்பதற்காக, digital content ஐ இலவசமாகவோ, அல்லது அடிமாட்டு விலைக்கோ கொடுப்பது அவர்களது திட்டம். இதுவும் பிரமாண்ட வெற்றியைக் கொடுப்பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை!

கிண்டில்போல மின் படிப்பானாக மட்டுமே இந்தக் குளிகை இருக்காது. கூகுளின் ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்தக் குளிகையில் மென்பொருள்களைப் பதிவேற்றிக்கொள்ளலாம். இது மடிக்கணினிக்கு நிகரானதாக இருக்கும் என்கிறது அமேசான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும்.

குளிகை விற்க இலவச content என்பது ஒரு புறமும் content விற்க விலை குறைந்த குளிகை என்பது மறு புறமும் இருந்தால், அமேசானின் மாடல் வெற்றியடைய வாய்ப்புகள் குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது. இதைச் சமாளிக்க ஒரே வழி, விலையைக் கூட்டுவது. அப்படிச் செய்தால், Xoomன் கதி அமேசான் குளிகைக்கும் ஏற்படலாம். தான் எடுத்த முயற்சிகளில் போராடி வெற்றி பெறும் வரலாறு அமேசானுக்கு உண்டு. மேகக்கணினியத் தொழில்நுட்பத்தில், ஆப்பிள், கூகுள் போன்ற ஜாம்பவான்கள் நுழையும் முன்னரே, அழுத்தமாகத் தனது பெயரைப் பதித்து, தொடர்ந்து வளர்ந்து வருகிறது இந்தப் ‘பழைய’ இணைய நிறுவனம். குளிகைத் துறையில் என்ன/எப்படி செய்யப்போகிறது என்பதை அக்டோபர் மாதவாக்கில் தெரிந்துகொள்ளலாம்.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் இணையத்தில் இயங்குகிறார்கள். அதில் முக்கால்வாசி ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் அத்தனை முக்கியம் இல்லை. காரணம், பொருளாதாரம் பயின்றவர்களுக்கு, ‘Law of diminishing returns’ என்ற விதி நன்றாகத் தெரிந்திருக்கும். முதலீட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்குத் தகுந்தபடி விளைவு அதிகரிப்பது இல்லை. அதற்கு மாறாக, குறையத் தொடங்கும் என்பதுதான் இந்த விதியின் சாராம்சம். தெளிவாகத் தெரிந்துகொள்ள, இந்த விதிபற்றிய விக்கி உரலியைச் சொடுக்குங்கள் http://en.wikipedia.org/wiki/Diminishing_returns. சமூக ஊடகத்தில் அதிக அளவில் பயனீட்டாளர்கள் இணையும்போதும், இதே விதியின்விளைவு நிகழும் என்பது உறுதி.

அதே வேளையில், டெக் உலகின் ட்ரெண்டுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெளிவாகப் புலப்படும். எந்த ஏரியாவில் (முக்கிய மாக கவனிக்கவும்… எந்த நிறுவனத் தில் அல்ல! எந்த ஏரியாவில்) தொழில் முதலீடு அதிக அளவில் செய்யப் படுகிறதோ, அந்த ஏரியாவில் ஆராய்ச்சிகளுக்காக அதிகம் செலவழிக்கப்படும். அதிகமானவை தோல்வியில் முடிந்தாலும், புதிய முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். 90-களில் ஈகாமர்ஸ் ஏரியாவுக்கு தண்ணீராய் அனுப்பப்பட்ட தொழில் முதலீட்டுப் பணம் தான், ஈபே, அமேசான் போன்ற பிரமாண்ட நிறுவனங்களை நிறுவவும், அவை வணிகம் என்பதன் அடிப்படை யையே மாற்றவும் பயன்பட்டது.

வீடியோ ஏரியாவில் செலுத்தப்பட்ட முதலீடு YouTube, BrightCode போன்ற நிறுவனங்களும் அவற்றின் தொழில்நுட்பங்கள் பயனீட்டாளர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது!

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சமூக ஊடகத் தொழில்நுட்பங்களுக்காகச் செலுத்தப்பட்டு இருக்கும் தொழில் முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள்.

நன்றி: – விகடன்



Tuesday, 24 April 2012

உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!!

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதே வேளையில் உயிர்க்கழிவுகள் என்று கூறப்படும் மனிதன் வெளியேற்றும் மலஜலம், காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய கழிவுகள் போன்ற அழுகிவிடும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும், எரிவாயுவையும் பெற முடியும் என்று பல காலங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. இந்த கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்க உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு அரசு மானியமும் வழங்குகிறது.

ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் குறைவு என்பது தான் துரதிர்ஷ்டம். கீழ்வரும் பயோகேஸ் என்ற மனித மலக்கழிவிலிருந்தும், வேறுபல உயிர்க்கழிவுகளிலிருந்தும் எரிவாயுவையும், மின்சாரத்தையும் எடுக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் எரிவாயு பற்றாக்குறை தீரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பயோகேஸ்
இது போன்ற உயிர்க்கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு அரசின் மரபுசாரா எரிசக்தி முகமையின் முகவரான மனோகரன் விளக்குகிறார். ” மனிதனின் மலஜலம் உள்பட மடிந்து போன அனைத்து உயிர் பொருள்களிலிருந்தும் எளிதாக எரிவாயுவை பெற முடியும். இப்படி பெறப்படும் எரிவாயுவை பயோகேஸ் என்கிறோம்.

தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் எல்.பி.ஜி சமையல் சிலிண்டர் வாயு, பெட்ரோல், டீசல் உள்பட பூமியில் இருந்து கிடைக்கும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தான் கிடைக்கும். இவை கிடைக்காமல் போகும் நிலையில் நாம் அடுப்பு எரிக்கவும், வாகனத்தை ஓட்டவும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரில் கூட கார் ஓட்டலாமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆனால் நம்மை போல் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக அளவு கிடைக்கும் மூலப்பொருளை வைத்து முதலில் சமையல் உள்பட அதிமுக்கியமான தேவைக்கு எரிவாயுவையும், மின்சாரத்தையும் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மலத்திலிருந்தும், உயிர்க்கழிவுகளில் இருந்தும் எரிவாயுவை பெறும் “பயோகேஸ்” அமைப்பு. இந்த பயோகேஸ் அமைப்பு மூலம் மின்சாரத்தையும் பெற முடியும். எரிவாயுவையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு.

எப்படி உருவாகிறது?
பொதுவாக மனித மற்றும் விவசாயகழிவுகள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் எளிதில் மக்கிவிடக்கூடியது. இயற்கையில் இந்த கழிவுகள் மக்கும் போது ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. மலமாக இருந்தாலும், வேறு தாவர இலை,தழை, இறைச்சி உள்பட எந்த உயிர்க்கழிவாக இருந்தாலும், அது பூமியில் விழும் போது மக்கி அழுக தொடங்குகிறது. இந்த அழுகுதல் என்பது தான் ரசாயன மாற்றம்.

அதாவது இந்த கழிவுகளில் கண்ணுக்கு தெரியாத உயிரினமாக பாக்டீரியாக்கள் என்று நுண்ணுயிரகள் பரவி அவற்றை தின்று ஜீரணிக்க முயல்கின்றன. அப்போது இந்த கழிவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள் ஆகிய பொருட்கள் வெப்பத்தினால் உலர்ந்து போகின்றன. அப்போது இவற்றிலிருந்து அசிட்டிக் அமிலம், புரோபியனிக் அமிலம், மற்றும் பிட்யூட்ரிக் அமிலம் என்ற ரசாயனங்கள் உருவாகின்றன.

இந்த மூன்று அமிலங்களும் கடைசியில் மீத்தேன் என்ற வாயுவாக மாறி விடுகின்றன. இந்த மீத்தேன் வாயு நன்றாக எரியும் தன்மை கொண்டது. இந்த வாயு மற்ற எரிவாயுக்களை விட மிகவும் வெப்பத்துடன் எரியும் தன்மை கொண்டது என்பதால் சமையல் உள்பட அனைத்து எரிக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி கழிவுகளை ஒரு இடத்தில் சேர்த்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை பெறுவது தான் “பயோகேஸ்” பிளாண்ட் என்ற எரிவாயுவை பெறும் கலன் அமைப்பு. இந்த எரிவாயு கலன்களை பெறும் அமைப்பை தான் நாங்கள் உருவாக்கி தருகிறோம்.

எரிவாயு கலன் அமைப்பு

இந்த எரிவாயு கலன் என்பது, குறிப்பிட்ட விதிமுறைகளின் படி பூமிக்கு அடியில் அமைக்கிறோம். ஏறக்குறைய இது 15 கியூபிக் மீட்டர் விட்டத்தில் சிறிய கிணறு போன்ற அமைப்பில் இது இருக்கும். நாம் எந்த பொருளிலிருந்து எரிவாயுவை தயாரிக்க நினைக்கிறோமோ அந்த கழிவுகளை இந்த கிணறு போன்ற அமைப்பில் இடவேண்டும்.

முழுவதும் காற்று புகாமல் மூடப்பட்டிருக்கும் இந்த அமைப்பினுள் இடப்படும் கழிவுகள் நொதித்தல் முறையில் மேலே சொன்ன பாக்டீரியாக்களால் அழுக வைக்கப்பட்டு அது கடைசியில் மீத்தேன் வாயுவாக உருவாகி இந்த கலனின் மேல்புறத்தை நோக்கி வந்து தேங்கும். பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் சமையலறைக்கு கொண்டு செல்லப்படும்.

மனித கழிவில் இருந்து உருவானது என்பதால், இதில் நாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் இந்த வாயுவை பற்ற வைப்பதற்காக திறக்கும் போது எந்த நாற்றமும் இருக்காது என்பது தான் உண்மை. குறைந்தபட்சம் 15 நபர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற எரிவாயு கலன்களை அமைத்து வீட்டிற்கு தேவையான எரிவாயுவை பெறமுடியும். ஏன், 15 நபர்கள் வரை இருக்கும் வீட்டில் தான் இதை அமைக்க முடியும் என்று சொல்கிறோம் என்றால், எரிவாயு உருவாக தேவைப்படும் போதுமான மனிதகழிவை குறைந்தபட்சம் 15 நபர்கள் இருந்தால் தான் பெறமுடியும்.
எங்கெல்லாம் அமைக்க முடியும்?

அதாவது 15 நபர்கள் வசிக்கும் அல்லது தொடர்ந்து புழங்கும் எந்த இடத்திலும் பயோகேஸ் எரிவாயு கலன்களை அமைக்க முடியும். 15 நபர்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்படும் ஒரு கலனிலிருந்து தற்போது நாம் பயன்படுத்தும் வீட்டு எரிவாயு எல்.பி.ஜி சிலிண்டர் அளவு கேஸை பெற முடியும்.

இது போன்ற இடங்கள் என்று எடுத்துக் கொண்டால், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், கேண்டீன்கள், கல்லூரி விடுதிகள், பேருந்து நிலையங்கள், அபார்ட்மெண்ட்கள் போன்ற அதிகம் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் இருக்கும் செப்டிக் டேங்குகளிலிருந்து எரிவாயுவை 24 மணி நேரமும் பெறும் வகையில் பயோகேஸ் கலன்களை அமைக்க முடியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரையில் இருக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பெரிய அளவிலான 3 பயோகேஸ் கலன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் எரிவாயு கலனிலிருந்து எந்த செலவும் இல்லாமல் 100 ஆண்டுகள் வரை சமைக்க மற்றும் வேறு தேவைகளுக்கான எரிவாயுவை பெற முடியும்.

இந்த செப்டிக் டேங்கிலிருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மிகவும் அழுத்தம் குறைந்த வாயு என்பதால் எல்.பி.ஜி வாயுவைப் போல் அபாயகரமானதோ, வெடிக்க கூடியதோ அல்ல. மேலும் இந்த எரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு இந்த கலனில் தேங்கும் தண்ணீர் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியதாக இருப்பதால் அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரமும் தயாரிக்க முடியும். இந்த பயோகேஸ் கலன்களை அமைக்க அரசு சார்பில் 5 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமாகவும் தரப்படுகிறது.

எனவே, தமிழக மாவட்டங்களில் உள்ள இது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் உடனே பயோகேஸ் கலன்களை அமைத்து எரிவாயுவை பெற்றோ, மின்சாரம் தயாரித்தோ செலவை மிச்சப்படுத்த முன்வந்தால் மிகப்பெரிய அளவுக்கு தங்களது எரிவாயு மற்றும் மின்சார செலவை குறைக்கலாம்” என்கிறார் இவர். இவரை தொடர்பு கொள்ள 94431 86572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, 22 February 2012

பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்! 

பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!
15TH APRIL, 2011
digg
Share
6


உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:

கீரை வகைகள்:

உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது.அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன.எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.

முழு தானியங்கள்:

முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம்.

கொட்டை பருப்புகள்:

பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும்.புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம்.

இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட.ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது.ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது.

தயிர்:

குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது.மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது. வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

நாவற்பழம்:

பெரும்பாலான நார்சத்து உணவு தயாரிப்புகளில் நாவற்பழம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதில் அதிக அளவு நார்சத்து இடம் பெற்றிருப்பதுதான். மேலும் ஆன்டாசிடென்ட்ஸும் இதில் அதிகமாக உள்ளது.இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது.

Tuesday, 14 February 2012

அட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா



ஆலு மசாலா!

தேவையானவை: உருளைக் கிழங்கு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள், சீரகத் தூள் – தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது மாங்காய் (அம்சூர்) தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:
உருளைக் கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உருளைக்

கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஆளையே அள்ளும் இந்த ஆலு மசாலா!

ஈஸி குருமா!

தேவையானவை:
நீங்கள் விரும்புகிற காய்கறிகள் – 2 கப், பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், இஞ்சி – 1 சிறிய துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 4, சோம்பு – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, கசகசா – 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை 5 நிமிடம் வதக்கி, இறக்கி, ஆறவிட்டு நைஸாக அரையுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சொல்ல மட்டுமல்ல… செய்வதற்கும் ரொம்ப ஈஸி இந்த குருமா! குறிப்பு: இந்த குருமாவில் மீல்மேக்கர் சேர்க்க விரும்புகிறீர்களா? மீல்மேக்கர் உருண்டைகளை, கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, பிறகு அவற்றைப் பச்சைத் தண்ணீரில் போட்டு 2 முறை கழுவி, 2 துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தை வதக்கும்போதே, இவற்றையும் சேர்த்து வதக்கி, சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான்.

தம் ஆலு!

தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெ. வெங்காயம் – 3, தக்காளி – 3, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தக்காளி – 3, எண்ணெய், உப்பு – தேவைக்கு.

பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4, மிளகு, தனியா – தலா 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பட்டை, ஏலக்காய் – தலா 1.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சற்றே பெரிய துண்டுகள் ஆக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய துண்டுகளைப் பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை,வெறும் கடாயில் வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். இப்போது, மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள பொடி தூவி, தக்காளி, தேவையான உப்பு, தயிர் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். உருளைக்கிழங்கு ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆகிவிடும் இந்த தம் ஆலு!

குறிப்பு: தக்காளி விருப்பமில்லாதவர்கள், மாங்காய்த் தூள் ஒரு டீ ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

பூண்டு இல்லாத குருமா!
தேவையானவை: நீங்கள் விரும்பும் காய்கறிகள் (நறுக்கியது) – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், முந்திரிப்பருப்பு – 6, உப்பு – தேவைக்கு.

அரைக்க: சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 அல்லது 5, இஞ்சி – 1 துண்டு, மல்லித்தழை – ஒரு கைப்பிடி.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலையும் முந்திரியையும் அரைத்துத் தனியே வையுங்கள். பிறகு, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரையுங்கள். இப்போது, எண்ணெய், நெய் இரண்டையும் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் தேங்காய் விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். பூண்டு விரும்பாதவர்களுக்கான ஸ்பெஷல் குருமா இது!

சன்னா மசாலா!

தேவையானவை: சன்னா – 1 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 2 பல், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். இதனுடன் தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்கி, இறக்கி ஆறவிட்டு, எல்லாவற்றையும் நைஸாக அரைத்தெடுங்கள். இப்போது வெந்த சன்னாவுடன் அரைத்த விழுதை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
அட… ஹோட்டல் சுவையை மிஞ்சும் சன்னா மசாலா தயார்!

சிம்பிள் ஆலு மசாலா!

தேவையானவை:உருளைக்கிழங்கு – அரை கிலோ, சின்ன வெங்காயம் – கால் கிலோ, பூண்டு – 15 பல், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் – 2 கப், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:உருளைக் கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, சீரகம், சோம்பு தாளியுங்கள். இதில், உரித்துவைத்துள்ள வெங்காயம், பூண்டைப் போட்டு 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர், இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நடுத்தரத் தீயில் கிழங்கு அரைப்பதமாக வேகும்வரை வதக்குங்கள். இதனுடன், மிளகாய்த் தூள், தனியா தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, கெட்டியாகும்வரை கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்குங்கள். பெயர்தான் ‘சிம்பிளே’ தவிர, சுவையில் கில்லாடி இந்த ஆலு மசாலா!

சன்னா கிரேவி!

தேவையானவை:சன்னா – 1 கப், புளிக் கரைசல் – 1 டேபிள் ஸ்பூன், உ. கிழங்கு – 1, வெல்லத்தூள் – 2 டீஸ்பூன், ப. மிளகாய் – 2, பெ.வெங்காயம் – 2, பிரிஞ்சி இலை -1, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், தக்காளி-3, உப்பு – தேவைக்கு.

அரைக்க: பெ.வெங்காயம் (சிறியதாக) – 2, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 6, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.

செய்முறை: சன்னாவை 7 மணி நேரத்துக்கு ஊறவையுங்கள். பிறகு, அதை உப்பு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நடுத்தரமான துண்டுகளாக்குங்கள். ப. மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். தக்காளியை தனியே அரைத்தெடுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலை, ப.மிளகாய் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த தக்காளி, புளிக்கரைசல், வெல்லத் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், வேகவைத்த சன்னாவையும் உ.கிழங்கையும் சேர்த்து, 5 நிமிடம் கிளறி, இறக்குங்கள். இந்த சன்னா கிரேவி, குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

கலர்ஃபுல் மசாலா!

தேவையானவை: காய்கறி கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், பனீர்… சிறு துண்டுகளாக நறுக்கியது) – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 4, மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கு.

செய்முறை: காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக மீண்டும் வதக்குங்கள். கடைசியில், வேகவைத்த காய்கறி, தேங்காய்ப் பால் சேர்த்து, விடாமல் கிளறி, 2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள் (கிளறாமல் இருந்தால், தேங்காய்ப் பால் திரிந்துவிடலாம்). காய்கறி கலவையால் பார்க்கவும் அழகாக இருப்பதால்தான், இதற்கு பெயர் கலர்ஃபுல் மசாலா!

தக்காளி மசாலா!

தேவையானவை:பெ. வெங்காயம் – 4, தக்காளி – 8, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 15 பல், கறி மசாலா தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, வெந்தயம் – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: தேங்காய்த் துருவல்-2 டேபிள் ஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன்.

செய்முறை:தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சோம்பு, வெங்காயம், பூண்டு, ம.தூள் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். இதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கறி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போக வதங்கி, தக்காளி கரைந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, கறிவேப்பிலை தூவி, கெட்டியாகும்வரை கிளறுங்கள். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி, பரிமாறுங்கள். சுவையில் இந்த தக்காளி மசாலா, ‘டக்கரான’ மசாலாதா¡!

சுரைக்காய் மசாலா!

தேவையானவை:சுரைக்காய் – 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிதளவு, பால் – அரை கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை: சுரைக்காயைத் தோல் சீவி, நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சீரகத்தைத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், இதனுடன் சுரைக்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பாலையும், கறிவேப்பிலையையும் சேர்த்துக் கிளறுங்கள். சுருண்டு, கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள். நாவுக்கு ‘சுள்ளென்று’ இருக்கும், இந்த சுரைக்காய் மசாலா!

குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

உலகில் ஆண்களால் 40 சதவிகிதமும், பெண்களால் 40 சதவிகிதமும், மற்ற காரணங்களால் 20 சதவிகிதமும் குழந்தைப் பேறு இல்லாமை ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், குழந்தை இல்லாமையைப் போக்கும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சாபம் அல்ல!

குழந்தை இல்லாமைக்கு முற்பிறவியில் செய்த பாவம் அல்லது சாபம் என்று நினைப்பது மிகவும் தவறானது. இத்தகைய தவறான மனப்போக்குகள் மாறி வருகின்றன. இது கணவன் & மனைவி இருவரையும் சார்ந்த பிரச்சனை எனப் புரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது ஆரோக்கியமான விஷயம். இதனால் கணவன் & மனைவி இருவரும் சேர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

எப்போது டாக்டரிடம் செல்ல வேண்டும்?

புதிதாகத் திருமணம் செய்து கொள்வோர் எந்தவிதக் கருத்தடைச் சாதனங்களையும் பயன்படுத்தாமல், ஒரு வருடம் தாம்பத்ய உறவை மேற்கொண்டும் கூட கருத்தரிக்கவில்லை என்றால், குழந்தைப்பேறு இல்லாமைக்கான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். இத்தகையோர் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரிடம் உடனடியாகச் செல்வது அவசியம்.

இயல்பாக கரு உருவாதல் குழந்தைப்பேறு கிடைப்பதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ ரீதியாகச் சம பங்கு உள்ளது. அதாவது போதுமான அளவுக்கு நல்ல விந்து அணுக்களை ஆண் உற்பத்தி செய்து, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் கொண்டு சேர்க்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். அந்த விந்தணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவையாக இருக்க வேண்டும்.

இதே போன்று, ஒரு பெண்ணுக்கு கருமுட்டையின் உற்பத்தி சரியாக இருக்க வேண்டும். அது கர்ப்பப் பைக்கு வரும் வழி அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். கருமுட்டையையும், விந்தணுவையும் ஏற்ற கருவை வளர்க்கக் கூடிய வலுவான நிலையில் கர்ப்பப்பை இருக்க வேண்டும்.

மேலே சொன்னவை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான அடிப்படை விஷயங்களில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அது குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

ஆண்களே, புகை வேண்டாம். விந்து அணுக்கள் குறைவாக இருத்தல், உயிர் அணுக்கள் இல்லாமல் இருத்தல் ஆகியவை ஆண்களைப் பொறுத்தவரை, பொதுவாக குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைகிறது. இது தவிர சிகரெட்டும் முக்கிய காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அதன் ஊர்ந்து செல்லும் தன்மையையும் வடிவத்தையும் பாதிக்கிறது. சர்க்கரை நோயும் ஆண்மைக் குறைவுக்குக் காரணமாக அமைந்துவிடும்.

இவை தவிர, உணவில் புரதச் சத்துக் குறைவு, வைட்டமின் இ, பி. காம்ப்ளக்ஸ் குறைவு போன்றவை, விந்தணு குறைவுக்குக் காரணங்களாக இருக்கின்றன.

பெண்களைப் பொறுத்தவரை பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளே குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, கருமுட்டைகள் உற்பத்தியாகாத நிலை, கர்ப்பப்பை வளர்ச்சி இன்மை ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தசோகை, புரதச்சத்துக் குறைவு ஆகியவையும் பெண்களுக்கான குறைபாட்டுக்கான காரணங்கள்.

நவீன சிகிச்சைகள் என்றால் என்ன?

குழந்தை இல்லாமைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, நவீன முறையில் சிகிச்சை அளித்து குழந்தைப் பேறை உருவாக்கும் அளவுக்கு மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1973&ம் ஆண்டில் ‘டெஸ்ட்டியூப் பேபி’ எனப்படும் சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள ‘பான்ஹால்’ மருத்துவமனையில் 1978 ஜூலை 25&ம் தேதியன்று முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது. முதல் அதிசயக் குழந்தைக்கு ‘லூயிஸ் பிரவுன்’ எனப் பெயரிட்டனர். இச்சாதனையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கும் வசதி படைத்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 3 லட்சத்தைத் தொட்டுவிட்டது.

ஐ.வி. எஃப் முறை (I.V.F.)
பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால், விந்தணுக்கள் அதன் வழியே சென்று கருமுட்டையை அடைய முடியாது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே ‘ஐ.வி.எஃப்’ முறை என்ற சோதனைக்குழாய் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில் பெண்ணின் முட்டைப்பை ஊக்குவிக்கப்படும். பின்னர், சேகரித்த முட்டைகளை தரமான உயிர் அணுக்களுடன் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கரு உருவாக்கப்படும்.
நன்கு வளர்ந்த தரமான கரு, பின்னர், ஊசி மூலம் கருப்பையினுள் நேரடியாகச் செலுத்தப்படும். கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள் பிள்ளை பெறமுடியாது என்ற நிலையை ஐ.வி.எஃப். முறை தகர்த்தது.

இக்ஸி சிகிச்சை முறை (I.C.S.I.)

சோதனைக் குழாய் முறையில் பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்து அணுக்களையும் ஒன்றாக இணைத்து, கருவை உருவாக்குவதற்கு சில 100 நல்ல விந்தணுக்கள் தேவைப்பட்டன. ஆனால் ‘இக்ஸி’ முறையில், கருவை உருவாக்க ஒரே ஒரு நல்ல விந்தணுவே போதுமானது. விந்துப் பையிலிருந்து இந்த விந்து அணுவை எடுக்கவும் சாத்தியம் உள்ளது. மேலும் ‘ஐ.வி.எஃப்’ சிகிச்சை முறையினால் குழந்தை பெறுவதற்கான வெற்றி வாய்ப்பு 30 சதவீதம்தான் கிடைத்தது. ஆனால் இக்ஸி முறையில் வெற்றி வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த முறை 1992 முதல் பிரபலமாகத் தொடங்கியது. இந்த நவீன சிகிச்சை முறைகள் மூலம் ஆண், பெண் இருவரின் குறைபாட்டை 100 சதவீதம் போக்கி சிகிச்சை அளிக்க முடியும்.

குழந்தைச் செல்வத்தைப் பற்றி இஸ்லாம்…

(அல்லாஹ்) தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான்.  தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான்.  அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான்.  தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான்.  (அல்குர்ஆன்  42:49-50).

Friday, 20 January 2012

DRINKING WATER

Sunnahsabout DRINKING:

A Muslim should DRINK with right hand because SHAITAN (satan) drinks with left hand.

Sit and DRINK.

Recite "Bismillah" before DRINKING and say "Alhamdulillah" after DRINKING.

DRINK in three breaths and remove utensil from mouth after each sip.

Do not DRINK directly from the jug or bottle one should pour the content into the glass first and have a look at water and then DRINK.

தண்ணீர் குடிப்பதால்



12/16/2009 4:16:39 PM

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்.


தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பளபளக்க செய்யும்.


தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும் போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்துவிடுகிறது. அதனை குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.


தினமும் காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்பதுத்தலாம்.


----------
தண்ணீர் குடித்தால் காது வலி வருமா ?


கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளக்காடாகச் சூழ்ந்து விடுகின்ற மழைத்தண்ணீர் சலிப்பை உண்டாக்கியிருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் அன்றாடம் இரண்டு லிட்டர் குடிக்க வேண்டும் என்பது அவசியம். அதைப் பருகும் விதம் எப்படி என்பது இதோ இங்கே கூறப்படுவது சரிதானோ என்று யோசிக்க வைக்கின்றது.

டம்ளர் கணக்கில் தண்ணீர் குடியுங்கள் என்று கூறப்படுகிறது. எப்படிக் குடிக்க வேண்டும் ?



தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.

தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.

Monday, 16 January 2012

Islam

The beautiful word is ALLAH,
The beautiful word is ALLAH,
Most beautiful song is AZAN,
Best exercise is NAMAZ,
World perfect book is QURAN,
And You are so lucky if YOU are a MUSALMAN. By Ikhan

Friday, 11 November 2011

Real hatees

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர். அந்த வகைகளை அறிந்து வைத்துக் கொண்டாலே ஹதீஸ்கலையில் பெருமளவு அறிந்து கொண்டதாகக் கொள்ளலாம்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

4. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.

நான்கு வகைகளையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஒரு செய்தியை அறிவிக்கும்போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல்வடிவில் தொகுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குத் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் அதைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக்கொள்வார்கள். எல்லா ஹதீஸ் நூற்களும் இந்த வகைளில் தான் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழாக்க ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

“தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது” என்பது முதலாவது ஹதீஸ்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்.

இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர்.

அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார்.

ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட வரைபடம் மூலம் விளங்கலாம்.

மேற்கண்ட இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.

இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகிறார். இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.

இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

ஏற்கப்படாத ஹதீஸ்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது “மவ்ளூவு” வகை ஹதீஸ்களாகும். “மவ்ளூவு” என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத - அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும், நிருபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாகவும் - எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவைகளாக அமைந்தவை.

புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.

அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.

இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்த தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்

இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களையும் அறிந்து கொள்வோம். முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன்? எப்படி? இந்தச் சமுதாயத்தில் நுழைந்தன? என்பதை அறிந்து கொள்வோம்.
அ) இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

திருக்குர்ஆனில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நம்ப முடியாத உளறல்களையும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பரப்பலானார்கள்.

இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!
யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும்.

கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும்.

நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத்தன்மையுடையதாக இருந்திருக்கும்.

உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.

ஆகாயத்தில் உள்ள பால் வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண்குஷ்டத்தை ஏற்படுத்தும்

தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.

பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றை பார்ப்பது பார்க்கும் திறனை அதிகரிக்கும்.

அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும்.

கண்கள் நீலநிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.

பெண்களிடம் ஆலோசணை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்.

கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.

160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும்

ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான்.

இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினார்கள். நடை முறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. கத்திரிக்காய் அனைத்து நோய்க்கும் மருந்தாக இல்லை. மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்துவதும் இல்லை. பருப்பு சாப்பிடுவதற்கும் இதயம் இளகுவதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. (பருப்பு சாப்பிடும் கூட்டம் தான் பள்ளிவாசலை இடித்தனர்) கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அர்ஷுக்கு கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை. சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் இலட்சக்கணக்கான மக்கள் குளித்தும் யாருக்கும் குஷ்டம் வரவில்லை. ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியை பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகுகின்றனர்.

நீல நிறக்கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். இரவு, பகல், ஏற்பட்ட பின்தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாக ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.

இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.

Real hatees

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர். அந்த வகைகளை அறிந்து வைத்துக் கொண்டாலே ஹதீஸ்கலையில் பெருமளவு அறிந்து கொண்டதாகக் கொள்ளலாம்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

4. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.

நான்கு வகைகளையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஒரு செய்தியை அறிவிக்கும்போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல்வடிவில் தொகுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குத் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் அதைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக்கொள்வார்கள். எல்லா ஹதீஸ் நூற்களும் இந்த வகைளில் தான் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழாக்க ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

“தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது” என்பது முதலாவது ஹதீஸ்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்.

இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர்.

அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார்.

ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட வரைபடம் மூலம் விளங்கலாம்.

மேற்கண்ட இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.

இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகிறார். இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.

இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

ஏற்கப்படாத ஹதீஸ்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது “மவ்ளூவு” வகை ஹதீஸ்களாகும். “மவ்ளூவு” என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத - அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும், நிருபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாகவும் - எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவைகளாக அமைந்தவை.

புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.

அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.

இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்த தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்

இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களையும் அறிந்து கொள்வோம். முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன்? எப்படி? இந்தச் சமுதாயத்தில் நுழைந்தன? என்பதை அறிந்து கொள்வோம்.
அ) இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

திருக்குர்ஆனில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நம்ப முடியாத உளறல்களையும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பரப்பலானார்கள்.

இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!
யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும்.

கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும்.

நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத்தன்மையுடையதாக இருந்திருக்கும்.

உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.

ஆகாயத்தில் உள்ள பால் வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண்குஷ்டத்தை ஏற்படுத்தும்

தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.

பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றை பார்ப்பது பார்க்கும் திறனை அதிகரிக்கும்.

அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும்.

கண்கள் நீலநிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.

பெண்களிடம் ஆலோசணை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்.

கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.

160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும்

ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான்.

இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினார்கள். நடை முறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. கத்திரிக்காய் அனைத்து நோய்க்கும் மருந்தாக இல்லை. மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்துவதும் இல்லை. பருப்பு சாப்பிடுவதற்கும் இதயம் இளகுவதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. (பருப்பு சாப்பிடும் கூட்டம் தான் பள்ளிவாசலை இடித்தனர்) கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அர்ஷுக்கு கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை. சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் இலட்சக்கணக்கான மக்கள் குளித்தும் யாருக்கும் குஷ்டம் வரவில்லை. ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியை பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகுகின்றனர்.

நீல நிறக்கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். இரவு, பகல், ஏற்பட்ட பின்தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாக ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.

இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.

Tuesday, 8 November 2011

The Journey of LIFE is travelled only once!
So,
Make TAUBA for Past,
SHUKR for Present
And
DUA 4 the Future
Bcuz Dua is the Only Element that Changes TAQDEER….

Saturday, 5 November 2011

____.
._______________.–”~~”-.
____________,-”____.-~~”-\___.
___.______.^______/____(_)_.
____+___{_.—.___/______~
________/____.__Y____.
_______/_____\_j_______+
._____Y_____(_)–l__
______|___________”-.______.
______|_____(________\
.__.___|________.)~-.__/__._____.
__.____l_________)
.____.__\____<;;;;;;l
__+_____\_______\
_________\_______^.
___._______^._______”-.___.
_____________”-._______~-.___,
_______._________”–.._____.^
may this eid brings lots of happiness
4 u n ur family (Ameen)
Eid is the combination of 3 meaningful words
E – Embrace with open heart
I – Inspire with impressive attitude
D – Distribute pleasure to all
~Eid Mubarak~

Friday, 4 November 2011

Haj and umra

பக்கம் - 1
1. ஹஜ்ஜின் சிறப்புகள்
2. ஹஜ்ஜின் அவசியம்
3. பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும்
4. சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?
5. முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா?
6. ஹஜ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால்?
பக்கம் - 2
7. இஹ்ராம் கட்டுவது
8. தல்பியா கூறுதல்
9. தல்பியாவை உரத்துக் கூறுதல்
10. தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
11. இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள்
12. இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை
13. இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை
14. இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்
பக்கம் - 3
15. இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்
16. தவாஃப் அல்குதூம்
17. மக்கா நகரின் புனிதம்
18. மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்
19. தவாஃப் அல்குதூம் செய்யும் முறை
20. ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது
21. ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும்
22. ருக்னுல் யமானியை முத்தமிடுதல்
23. தவாஃப் செய்யும்போது ‘உலூ’ அவசியம்
24. தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை
25. நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்
26. தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
பக்கம் - 4
27. ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது
28. உம்ரா என்றால் என்ன?
29. மினாவுக்குச் செல்வது
30. ‘அரபா’ வுக்குச் செல்வது
31. அரபாவில் தங்குவதன் அவசியம்
32. அரபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்
33. அரபாவில் செய்ய வேண்டியவை
34. முஸ்தலிபாவுக்குச் செல்வது
35. மீண்டும் மினாவுக்குச் செல்வது
பக்கம் - 5
35. மினாவில் செய்ய வேண்டியவை
36. தவாப் அல் இபாளா
37. தவாப் அல் இபாளா செய்யும் முறை
38. பெருநாள் தொழுகை கிடையாது
39. கல்லெறியும் நாட்களும் இடங்களும்
பக்கம் - 6
40. தவாபுல் விதஃ
41. தவாபின் போது பேசலாம்
42. எந்த நேரமும் தொழலாம், தவாப் செய்யலாம்
43. ஆண்களுடன் பெண்களும் தவாப் செய்வது
44. அதிகமதிகம் தொழ வேண்டும்
45. அதிகமதிகம் தவாப் செய்ய வேண்டும்
46. ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டுதல்
பக்கம் - 7
47. பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால்
48. குர்பானி கொடுத்தல்
49. ஸம்ஸம் நீர்
பக்கம் - 8
50. பிறருக்காக ஹஜ் செய்தல்
51. மதீனாவுக்குச் செல்வது
பக்கம் - 9
52. குறிப்புகள்