Wednesday, 30 May 2012

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்
முதலில் டெங்கு காய்ச்சல் அறிகுறி

1 . டெங்கு கொசு கடித்தவுடன் உடல் முழுவதும் சிகப்பு புள்ளிகள் ஏற்படலாம் .
2 . தொடர்ச்சியான இருமல் வரலாம்.
3 . சிறுநீர் கழிக்கும் போது அல்லது உடலில் எந்த பகுதியில் இருந்தேனும் ரெத்த கசிவு ஏற்படலாம்.
4 கைகால் சோர்வு, உடல் முழுவதும் வலி ஏற்படலாம்.

இவை அனைத்தும் டெங்கு கொசு கடித்த 4 நாட்களில் தெரிய வரும் ....கவனமாக இருந்தால் வியாதி தீரும் இல்லையேல் ஆளை தீர்த்துவிடும்.

"வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்"

டெங்கு கொசு adc வகையை சார்ந்தது இது நல்ல தண்ணீரில் மட்டும் முட்டை விடும் ....ஆகையால் .

வீட்டில் அங்ஙனம் மற்ற பகுதியில் உள்ள கட்டி கிடக்கும் நல்ல தண்ணீர் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் ...

வீட்டில் வாசல் பகுதியில் தண்ணீர் கட்டி கிடந்தால், துப்புரவு பணியாளர் வரும் வரை காத்திருக்காமல் நாமே சுத்தம் செய்வது நல்லது.

"காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்"

டெங்கு காய்ச்சல் இருமலினால் பரவும் காய்ச்சல் அல்ல இது ஒரு வகை கொசு கடிப்பதினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல்தான். இது வந்த வுடன் 4 நாட்களில் நமக்கு தெரிந்து விடும் ,மேலே கூறிய அறிகுறிகள் போன்று. இதில் ஒரு விஷயம் என்ன வென்றால் இதற்க்கு தடுப்பு ஊசி கிடையாது ஆனால் மருந்துகள் உள்ளன ...எக்காரணம் கொண்டும் நாமாக சென்று மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்து உட்கொள்ள கூடாது ....அப்படி செய்தால் நம் உயிரை நீங்கள் உட்கொளும் இரு மாத்திரையில், இரு வாரத்தில் உங்கள் உயிரை அது உட்ட்கொள்ளும் .. ஆகையால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று காண்பிக்க வேண்டும்.
அவர்கள் உடனே உங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்பார்கள் (platelets ) .என்று சொல்ல கூடிய வெள்ளை அணுக்களை தின்று விடும் .10 நாட்களில் .பின்பு நுரையிரல் , கிட்னி மற்றும் உடலில் பிற பகுதிகள் செய்யல இழந்து விடும் ......இல்லையேல் இரு வாரத்தில் நமது உயிரை குடித்து விடும் ...

"காய்ச்சல் வந்தாலும் , வருவதற்கு முன்பும் என்ன உணவு உட்கொள்ளலாம்"
1 இளநீர் 2 . கஞ்சி 3 . தண்ணீர் சத்து மிகுந்த பானங்கள்
4 உப்பு கரைசல்
இதை நான் சொல்வதற்கு காரணம் ... எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மற்றும் அருகில் உள்ள ஊரான கடையம் , தென்காசி போன்ற ஊர்களில் பரவி இது வரை 33 பேர் இறந்து உள்ளனர் இவர்கள் சரியான நேரத்தில் காண்பிக்க தவறி இருக்கலாம் இல்லையேல் நோய் முற்றிய பிறகு காண்பித்து இருக்கலாம். இந்த இறப்பில் சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அடங்குவர் ...
மேலும் இந்த டெங்கு காய்ச்சல் மதுரை மற்றும் மெட்ராஸ் பகுதியில் பரவி வருவதாக கூறி வருகின்றனர் ...இது இருமல் போல பரவும் காய்ச்சல் அல்ல ...மக்கள் டெங்கு கொசு வராமல் தடுத்து உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது.

"ஒரு எச்சரிக்கை" "அறியாமையால் வந்த தவறு"
கொசுவை ஒளிபதற்காக நகராட்சியில் கொடுக்கும் போது இந்த மருந்து கொசு மற்றும் பூச்சிகளை கொள்ளும் என்று ஒரு பாட்டிலில் கொடுத்து உள்ளார்கள் அதாவது தண்ணீர் தொட்டியில் ஊற்றுவதற்கு .. இதை வாங்கி வைத்த ஒரு அம்மா தன மகளுக்கு பூச்சி கடிக்கிறது என்று கூறவும் அந்த அம்மாவுக்கு வாங்கி வைத்த மருந்தின் ஞாபகம் வரவே அதை அறியாமையால் கொடுத்துள்ளார் பின்பு அக்குழந்தையை மிகவும் சிரம பட்டு காப்பற்றினார்கள் .....அதற்க்கு பின்புதான் கொடுக்கும் கொசு மருந்தை நகராட்சி நிர்வாகமே அனைத்து வீட்டு தண்ணீர் தொட்டிகளிலும் நேரடியாக ஊற்றி வந்தது என்பது குறுப்பிட தோன்றியது

நண்பர்களே , மக்களே இது போன்ற அறிகுறி உங்கள் பகுதியில் இருந்தால் இல்லை காய்ச்சல் வந்தால் இந்த நிகழ்வுகளை கூறுங்கள் ...

நன்றி ... நன்றி .... நன்றி !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மட்டும் ஒரு "விழிபுனர்வுக்காக"
... . .

கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்

(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.)

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

Monday, 14 May 2012

பார்க்காமல் இருக்க முடியவில்லை!!!!!

பார்க்காமல் இருக்க முடியவில்லை!!!!! – பார்த்தாலும் இருக்க முடியவில்லை!!!!!

தொலைக்காட்டி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக் காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம்.

நாட்டு நடப்புக்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய விளிப்புணர்வுத் தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலே இருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை.

ஆம் திரைப்படத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணி நேரங்கள் வீனடிக்கப்படுகின்றனவென்றால், தொலைக்காட்சித் தொடர்களுக்கு நாளும் பல மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டு குடும்பமே அமர்ந்து ரசிக்கும் நிலை உருவாகியுள்ளது.

குடும்பப் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.
இளைஞர்களுக்கான உற்சாகமூட்டும் தொலைக்காட்சித் தொடர் நாடகம்.
இளம் பெண்களின் எண்ணத்திற்கேற்ற தொடர் கதை.
சிறுவர்களை வயப்படுத்தும் தொடர் நாடகம்.
வயோதிபர்களின் வயதுக்கேற்ற நாடகம்.
என்று பல வித்தியாசமான விளம்பரங்களுடன் ஒளிபரப்பப்படுகின்றன இன்றைய நாடகங்கள்.

இந்தியா, இலங்கை போன்ற ஆசிய தமிழ் பேசும் மக்களைத் தாண்டி உலகலவில் பல நாடுகளிலும் இந்த தொலைக் காட்சித் தொடர் நாடகங்கள் பிரபலம் பெற்றுள்ளன.

தொலைக்காட்சித் தொடர்களும், விபரீதங்களும்.

தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கி, அவற்றை ரசித்துப் பார்க்கக் கூடிய பெண்கள், மறுமை நாளின் நிகழ்வுகளை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

கற்பனையான கதைகள், பொய்யான தகவல்கள், சமூக சீர்கேடுகள், பழிவாங்கள் தந்திரங்கள், கொலை முயற்சிகள், என்று மனிதனை ஒரு கேவலமான ஜீவனாக காட்ட முனையும் இந்த தொடர் நாடகங்களைப் பார்ப்பவர்கள் இறுதியில் அதை தானும் பின்பற்றும் தீய நிலைக்கு செல்வதை கண் கூடாகக் காணக் கிடைக்கிறது.

தொலைக்காட்சி நாடகம் பார்த்தேன் அதன் படி கொலை செய்தேன்.
நாடகத்தில் வந்ததைப் போல் செய்து பார்க்க எண்ணி தூக்கில் தொங்கினான் மரணித்து விட்டான்.
தொலைக்காட்சித் தொடர் வழியில் எனது கோபத்தை தீர்த்துக் கொண்டேன்.
தவறு செய்துவிட்டு இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதைப் தினமும் காணக்கிடைக்கும்.
மாமியாரை பழிவாங்குவது எப்படி?
மருமகளை அடக்குவது எப்படி?
தாயையும், மகனையும் பிரிப்பது எப்படி?
சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினையை உண்டாக்குவது எப்படி? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள்.

உலக வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படி மரணிக்கிறானோ அப்படியே தான் (மறுமையில்) எழுப்பப் படுவான். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) அவா்கள். (நூல் முஸ்லிம் 5126)

நாம் தொலைக்காட்சியைப் பார்ப்பது தவரல்ல அதில் உள்ள நல்ல செய்திகளைப் பார்க்களாம், பார்க்க வேண்டும். ஆனால் தொலைக்காட்சி தொடர் போன்ற பாவமான நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அல்லாஹ்விடம் தண்டனை பெரும் குற்றத்தை நாம் செய்கிறோம் என்பதை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பாவங்களை செய்து கொண்டிருக்கும் போது (தொலைக்காட்சித் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது) நமது உயிர் பிரிந்தால் நமது நிலை என்னவாகும்?

நாம் எப்படி மரணிக்கிறோமோ அப்படித்தான் மறுமையில் எழுப்பப்படுவோம் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நமது மரணம் தீமையை செய்து கொண்டிருக்கும் போது நிகழ்ந்தால் கண்டிப்பாக நாம் பாவியாகத்தான் எழுப்பப்படுவோம். ஆதலால் இந்தத் தீய காரியத்தை விட்டும் நாம் நம்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

வீட்டில் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஓய்வாக இருக்கும் போதுதான் இந்த நாடகங்களைப் பார்க்கிறோம் என்று சிலர் தாம் செய்யும் பாவத்திற்கு ஒரு சாக்குச் சொல்வார்கள்.

ஓய்வு நேரத்தை எத்தனையோ நல்ல காரியங்களில் பயன்படுத்த முடியும் ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இது போன்ற தீய காரியங்களில் பயன்படுத்துவதற்கான வழியாகத் தான் இந்த பதிலை அவர்கள் தயார் செய்திருப்பார்கள்.

பார்க்காமல் இருக்க முடியவில்லை பழகிவிட்டோம், பார்த்தாலும் இருக்க முடியவில்லை பிடித்துவிட்டது இது போன்ற பல பதில்கள் நமது குடும்பப் பெண்களிடம் இருந்து சர்வ சாதாரணமாக வெளிப்படுகின்றன.

குர்ஆன் ஓதுதல்.
மார்க்கம் தொடர்பான மாத இதழ்களை படித்தல்.
சிறந்த புத்தகங்களை வாசித்தல்.
பயான் நிகழ்ச்சிகளை பார்த்தல்.
பிள்ளைகளுடன் விளையாடுதல்.
பிள்ளைகளுக்கு படித்துக் கொடுத்தல்.
தையல் வேலைகளை செய்தல்.
தாய்க்கு உதவிகளை செய்தல்.
உறவினர்களுக்கு உதவுதல்.
மனைவிக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்தல்.
நமது சொந்த வேலைகளை செய்து கொள்ளுதல்.
சொந்தங்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்தல்
என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமான ஓய்வு நேரத்தில் எங்களுக்கு வேலைகள் இல்லை, அதனால் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறோம் என்று சர்வ சாதாரணமாக பதில் சொல்லும் தாய்மார்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.

இரண்டு அருட்கொடைகள் விஷயத்தில் மக்கள் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள் அவை ஓய்வு நேரமும், ஆரோக்கியமுமாகும். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நூல் : புகாரி)

ஓய்வு நேரத்தை ஒரு பாக்கியமாக இஸ்லாம் சொல்லித்தருகிறது. ஓய்வு நேரத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்தும் போது வாழ்க்கையில் பல வெற்றிப்படிகளை நாம் எட்ட முடியும்.

நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குறிய வேலைகளை செய்திருக்கிறார்கள், தனது செருப்பை தானே தைத்திருக்கிறார்கள் என்ற செய்திகளையெல்லாம் நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

நமது ஓய்வு நேரங்களில் நாம் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நேரத்தை பிரயோஜனமானதாக மாற்றலாம்.

நம்மையே மறக்கச் செய்யும் தீய செயல்.

தொலைக்காட்சி தொடர் நாடகங்களினால் ஏற்பட்ட பல விளைவுகள் பத்திரிக்கைச் செய்திகளில் நாம் காணக்கிடைக்கின்றன.

தாய் நாடகம் பார்த்துக் கொண்டிருப்பதை பயன்படுத்தி கடத்தப்பட்ட குழந்தைகள்.

தொலைக்காட்சித் தொடரில் தாய் மூழ்கிப் போய் குழந்தையை மறந்திருந்த நேரம் வீட்டு முன்பிருந்த சாக்கடையில் விழுந்து மரணித்த குழந்தை.

இது போன்ற செய்திகள் தினமும் செய்தித் தாள்களில் வருவதற்கு காரணம் என்ன? கற்பணையகஷாக உருவாக்கப்பட்ட கதைகளில் நம்மை நாம் தொலைத்து நமது பொன்னான நேரத்தையும் தொலைத்து, நமது குடும்பத்தினரின் எதிர்காலம், நமது எதிர்காலம் என்று அனைத்தையும் இழந்துவிடுகிறோம்.

வெட்கத்தை இழக்க வைக்கும், வெட்கம் கெட்ட செயல்.

ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல்: புகாரி 9)

மனிதனின் மிக முக்கிய குணங்களில் மதிக்கத் தக்க ஒரு குணம் தான் வெட்கம் என்பது இன்றைக்கு யாரெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருக்கிறார்களோ அவர்களிடம் இந்த குணம் படிப்படியாக குறைந்துவிடுவதை நாம் காண முடியும்.

அண்ணிய ஆண்களிடம் சாதாரணமாக பேசும் பெண்கள், பெண்களிடம் சாதாரணமாக குழைந்து பேசும் ஆண்கள் என்று அனைவரிடமும் வெட்கம் அற்றுப் போவதற்கு இந்த தொடர்கள் காரணமாக இருக்கின்றன.

அண்ணியை அண்னை என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணனுக்கு துரோகம் செய்யும், தம்பிகளை உருவாக்கியது இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தாம்.

கணவனின் தம்பியை என் தம்பியாக நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு கணவனுக்க மாறு செய்யும் மணைவிகளை உருவாக்கியதும் இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தாம் என்பதில் எல்லளவுக்கும் சந்தேகம் இல்லை.

“என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, “ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி), (நூல்: புகாரி 6846, 7416 )

மனைவி என்பவள் நமக்கு மட்டும் உரிமையானவள், நவீன விற்பனை பொருள் அல்ல மற்றவர்களுக்கும் காட்சிப் படுத்துவதற்கு.

“என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்களே அவர்களின் ரோஷம் நமக்கு வேண்டாமா? நபியவர்கள் அவர்களை பாராட்டிப் பேசினார்களே அது போல் நாம் மாற வேண்டாமா?

சமுதாயத்தில் நடப்பதைத்தானே காட்டுகிறார்கள்?

சமுதாயத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறார்கள் என்று தன்னிலை விளக்கம் சொல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா? சமுதாயத்தில் நடப்பதை காட்டுவதாக சொல்பவர்கள் தாம் சமுதாயத்தில் அப்படி நடப்பதற்கு காரணமாகவே இருக்கிறார்கள்.

ஒரு குற்றத்திற்கு காரணமாக இருந்துவிட்டு, அப்படி நடக்கிறது என்பதை சமுதாயத்திற்கு உணர்த்துகிறோம் என்று பதில் சொல்வது எந்த ஊரில் அறிவுடமையாக பார்க்கப்படுகிறது? கேவளமான தொழிலுக்கு மரியாதையான பெயரா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார்,அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3971

சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்களின் பட்டியலில் நாம் சேர வேண்டுமா என்ன?

சகோதரிகளே! ஆடை விஷயமாக இருந்தாலும், தலை முடியை பிண்ணல் போடும் விஷயமாக இருந்தாலும் அனைத்திலும் நாம் பின்பற்ற நினைப்பது தொலைக்காட்சித் தொடர் நாயகிகளை, நாயகர்களைத் தானே?

நமது வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது இவர்கள் யார் நமக்கு நாகரீகம் கற்றுத்தருவதற்கு?

உலகிலும், மறுமையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட தீய செயல்களைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

Sunday, 13 May 2012

உன்னைத் திருத்து


இரக்கமில்லா இரவில் தன்னந்தனியாய்
நடு வீதியில் நானிருக்க
நாணமில்லா நளினத்துடன் நடைபயின்றால்
நங்கையொருத்தி நானிருந்த திசைபார்த்து.....

அவளின் அழகான சிரிப்பில் ஆபத்தை உணர்தியது
என் மனம் சற்று ஒதுங்கினேன்.
வெறுப்புடன் நானிருக்க வெட்கமில்லா
வாய்ப் பேச்சால் என் எண்ணம் கலைத்தால்
'சார் காலையில சாப்பிட்டது ஏதாவது help பண்னுங்க?'

மனிதம் மங்காத என்னில் மனிதாபிமானத்தோடு
50 ருபாய் கொடுத்தது என் கரங்கள்
விசாரனைக் கேள்வி தொடுத்தது என் நாவு
யார் நீ? இந் நேரம் என்ன செய்கிறாய்?

மறு நிமிடம் நனைந்தது அவள் கண்கள்
சற்று தடுமாறியது என் இதயம்...

வெட்கமில்லாமல் சொன்னால் அவள் ஒரு
விடுதியில்லா விபச்சாரி என்று
ஏன் இப்படி? எதற்கு இந்த தொழில்?
மீண்டும் கேள்வி தொடுக்கப்பட்டது
என்னில் இருந்து.......

சொன்னால் செய்தி ...........
அவளின் சோகச் செய்தி...........

இறைவன் ஒருவன் இருந்திருந்தால்
அம்மா என்னை அரவனைத்திருந்தால்
என் அப்பா உழைத்திருந்தால்
காதலன் கரம் பிடித்திருந்தால்
கணவன் காப்பாற்றியிருந்தால்
இச் சமூகம் சாக்கடையாய் மாறாமல் இருந்திருந்தால்
என் வாழ்வும் மலர்ந்திருக்கும் என்றது அவள் நாவு

என் வார்தை வழுவிழக்க
என் உடம்பு படபடக்க
என் மனம் குழம்பி அழுதது
இப்படியும் ஒரு பிரச்சைனையா என்று
விடைகொடுத்தேன் சற்று பரிதாபத்துடன்

வலிகள் நிறைந்ததுதான் வாழ்கை என்று
சொன்ன நான் சோகத்தில் மூழ்கினேன்
சமுதாயத்தின் சில சாக்கடைகளை எண்ணி

என்ன செய்யலாம் என்ற யோசனையில் தத்தளித்த போது
'திருடுற கூட்டம் திட்டம் போட்டுத் திருடிக் கொண்டே இருக்குது
அதை தடுக்குற கூட்டம் சட்டம் போட்டுத் தடுத்துக் கொண்டேயிருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'என்ற
ஒரு கவிஞனின் வரி எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தது

'உன்னைத் திருத்து உலகம் தானாய் திருந்தும்'
என்ற எண்ணக் கருக்குள் அடங்கிப் போனேன்
என் எழுத்துக்களுடன்...........

Friday, 11 May 2012

வாழ்கை....!!!!!


உன் உருவம் காட்டும் கண்ணாடி போன்றது
உன் வாழ்கை
நீ எதை காட்டுகிறாயோ அதையே அது உனக்கு
பிரதிபலிக்கும்

நீ அறைகூவும் எதிரொலி போன்றது உன்
வாழ்கை
நீ என்ன சொல்லி அழைக்கிறாயே அதுவும்
அதையே சொல்லி உன்னை அழைக்கும்

உன் வாழ்கையின் அத்திவாரம் உன் தன்நம்பிக்கை
அதை நீ உறுதியாக இட்டுக்கொண்டால்
உன் கட்டிடம் நிலைநிற்கும்

உன் வாழ்கையின் மூச்சு உன் முயற்சி
அதை நீ நிறுத்திவிட்டால்
உன் வாழ்கை முடிவடைந்து விடும்

உன் வாழ்கையின் ஆரம்பம் உன் வெற்றி
அதை நீ பெற்றுக்கொண்டால் அமைதி அடைந்து கொள்
அது உனக்கு மேலும் ஒரு ஆரம்பமாயிருக்கும்

உன் வாழ்கையின் ஏணி தோல்வி
அதை நீ பெறா விட்டால்
உன்னால் மேற் செல்வது கடினமாகிவிடும்

உன் வாழ்கையின் இதயம் நல்ல குணம்
அதை நீ சுத்தப்படுத்தா விட்டால்
உன்னில் நோய் உறுவாகிவிடும்

உன் வாழ்கையின் உணவு பணம்
அதிகமாய் சாப்பிட்டால்
அது உனக்கு நஞ்சாக மாறிவிடும்

உன் வாழ்கையின் முகம் உன் காதல்
அதை நீ இழந்து விட்டால்
உன் உருவம் மதிப்பற்றதாகி விடும்

உன் வாழ்கையின் போதை அதுவே உனது மமதை
நீ அதை அருந்தி விட்டால்
உன் வாழ்வு தள்ளாடிவிடும்

உன் வாழ்கையின் வழிகாட்டி உன் ஆசான்
நீ அதை சரியாக தெரிவு செய்யாவிட்டால்
உன் திசை மாறிவிடும்

உன் வாழ்கையின் வெளிச்சம் உன் நண்பர்கள்
அதை நீ அனைத்து விட்டால்
உன் வாழ்கை இருளடைந்து விடும்

உன் வாழ்கையின் அமைதி உன் செல்வம்
உரிய முறையில் பயன்படுத்தாவிட்டால்
அதுவே உன்னை ஆபத்தை நோக்கி நகர்த்தும்

உன் வாழ்கையின் நஞ்சு பொறாமை
அது துளி உட்சென்றாலும்
உன் வாழ்வு முற்றுப் பெற்று விடும்

உன் வாழ்வின் சுவர்க்கம் உன் பெற்றோர்
அவர்களை நீ பிரிந்து விட்டால்
சுகமும் உன்னை விட்டுப் பிரிந்து விடும்

உன் வாழ்வின் போர்வை உன் மனைவி
அவளை நீ நிராகரித்தால்
உன் மானம் சென்று விடும்

உன் வாழ்வின் மேகம் உன் சொந்தம்
அவர்கள் இல்லாவிட்டால்
உன் பூமி மழையின்றி வரண்டுவிடம்

உன் வாழ்கையை எரிக்கும் நெருப்பு சந்தேகம்
அதற்கு நீ விரகூட்டினால்
உன் வாழ்வின் சாம்பலையும் கருக்கிவிடும்

உன் வழ்கையின் திருப்தி நிம்மதி
அதை நீ பெறாவிட்டால்
உன் வாழ்வு அற்தமற்றதாகிவிடும்

உன் வாழ்கையின் நோய் உன் கோபம்
அதை நீ சுகப்படுத்தா விட்டால்
அது உன்னை நோகடித்து விடும்

உன் வாழ்கையின் எல்லை இன்பம்
அதை நீ பெற்றுக் கொள்
அதுவே உன் வாழ்கையின் கவசம்

உன் வாழ்கையின் யதார்த்தம் துன்பம்
அதை நீ ஏற்காவிட்டால்
உன் மனிதம் மங்கிவிடும்

உன் வாழ்வின் முடிவு உன் மரணம்
அது உனக்கு நிகழ்ந்து விட்டால்
இச் சமூகம் உன்னை மறந்து விடும்

ஆகவே.......
ஒரு வெறும் தரை போன்றது உன் வாழ்கை
அதை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாயோ
அதன் விளைச்சல் உனக்குத்தான்
உனக்கு மட்டும்தான்

இன்று நன்மையை விதை தோழனே
நல்ல அறுவடையை பெறு
நாளை உன்னை வரவேற்கிறது
நேற்று உனக்கு விடை கொடுக்கிறது

இழந்ததை விட்டு விடு
இனி இருப்பதை பற்றிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்வு
அன்றுதான் என் கவிக்கும் சாவு

Thursday, 10 May 2012

நீங்கள் பேஸ்புக்கிஇற்க்கு அடிமையா?

நீங்கள் பேஸ்புக் பாவனையாளரா? அதன் மீதான உங்களது ஆர்வத்தை அளவிடும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் அளவுகோலொன்றினை உருவாக்கியுள்ளார்கள்.

நோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர்.

இதன் பெயர் ‘Bergen Facebook Addiction Scale’ ஆகும்.

சுமார் 400 பேரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சினையை அடுத்தே இதனை அவர்கள் தயாரித்துள்ளனர்.

அவ் அளவுகோல் இதோகீழை காட்டப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் தாம் பேஸ்புக்கிற்கு அடிமையாகிவிட்டோமா? என சந்தேகப்படுபவர்கள் எவராக இருந்தாலும் இதில் பெறும் புள்ளிகள் மூலம் தம்மை சுயமாக கணிப்பிட்டுக்கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது ஆராய்ச்சி தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையானவர்கள் எத்தகைய அறிகுறிகளைக் கொண்டிருப்பார்களோ அதே போன்ற அறிகுறிகளையே பேஸ்புக்கிற்கு அடிமையானவர்களும் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களே பேஸ்புக்கிற்கு அதிகமாக அடிமையாவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பெரியோரை விட இளம்வயதினரே பேஸ்புக்கிற்கு அதிகமாக அடிமையாவதாகவும், தாம் சமூக பாதுகாப்பற்றதாக இருக்கின்றோம் என உணர்பவர்கள் பேஸ்புக்கினை அதிகம் உபயோகிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெண்கள் அதிகம் பேஸ்புக்கிற்கு அடிமையாவதாகவும், இப்பழக்கத்தினால் தூங்கும் நேரம்,காலையில் கண்விழிக்கும் நேரம் என அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மகிழ்ந்து சிரித்த சம்பவங்கள்.

அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். 53:43
அல்லாஹ்வின் இந்த வசனத்தின் அடிப்படையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நகைப்பிற்குரிய பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிரித்த நிகழ்வுகள் பிறர் மனதை துன்புறுத்தும் வண்ணம் ஒருபோதும் அமைந்ததில்லை. சிரிப்பிற்குரிய சரியான காரணமுள்ள சந்தர்பங்களில் தான் சிரித்திருக்கிறார்கள். நபிகள்(ஸல்) அவர்கள் சிரிப்பில் சில சமயங்களில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கடைவாய்பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்திருக்கிறார்கள் அப்படிப்பட்ட சில நிகழ்வுகளை பார்ப்போம்.

மதினாவில் என்னை விட ஏழை இல்லை என்று சொன்னவரின் சம்பவம்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்துஇ அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்இ விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போதுஇ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போதுஇ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711

சிறு வயதில் ஆயிஷா (ரலி) அவர்கள் குதிரைக்கு இறக்கை உண்டு என்று சொல்லிய சம்பவம்:
நபி (ஸல்) தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து (வீட்டிற்கு) முன்னோக்கினார்கள். (ஆயிஷா (ரலி)) அவர்களின் அலமாரியின் மீது ஒரு திரைச் சீலையிருந்தது. (அதில் ஆயிஷாவிற்குரிய பெண் குழந்தைகளின் உருவம் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் இருந்தன.) அப்போது காற்றடித்து ஆயிஷாவின் விளையாட்டுப் பெண் குழந்தை பொம்மைகளை விட்டும் திரைச்சீலையின் ஒரு ஓரத்தை விலக்கியது. அப்போது நபியவர்கள்இ "ஆயிஷாவே இது என்ன?'' என்று கேட்டார்கள். என்னுடைய பெண் குழந்தைகள் என்று அவர் கூறினார். அவைகளுக்கு மத்தியில் இலை அல்லது தோலால் ஆன இரு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரையை நபியவர்கள் பார்த்தார்கள். உடனே நபியவர்கள்இ "அவைகளுக்கு மத்தியில் நான் காண்கின்றேனேஇ அது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கவர்இ குதிரை என்று கூறினார். "அதன் மீது என்ன?'' என்று நபியவர்கள் கேட்டார்கள். "இரண்டு இறக்கைகள்'' என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். "குதிரைக்கு இரண்டு இறக்கைகளா?'' என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்இ "சுலைமான் நபிக்கு குதிரை இருந்ததாகவும் அதற்கு இறக்கைகள் இருந்ததாகவும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?'' என்று கேட்டார்கள். உடனே நபியவர்கள் தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 4284

பாவத்திற்கு அல்லாஹ் நன்மை வழங்கும்போது இன்னும் அதிக பாவம் செய்ததாக சொல்லும் நபரின் சம்பவம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும்இ நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அப்போதுஇ "இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்'' என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டுஇ "நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்' என்று கூறப்படும். அவரும் "ஆம்' என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார். இந்நிலையில் அவரிடம்இ "நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு'' என்று கூறப்படும். அப்போது அவர்இ "இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!'' என்று கேட்பார்.

(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் 314


அல்லாஹ்வின் வல்லமையை பற்றி சொல்லும்போது :

யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஇ முஹம்மதே! அல்லாஹ்இவானங்களை ஒரு விரல் மீதும்இ பூமிகளை ஒரு விரல் மீதும்இ மரங்களை ஒரு விரல் மீதும்இ தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும்இ இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டுஇ நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம் என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில்இ தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகுஇ அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோஇ அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 4811

சொர்கவாசியின் உணவு பற்றிய சம்பவம்:

நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்றுஇ சர்வ வல்லமைபடைத்த(இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடு வான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான் என்று கூறினார்கள்.
அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்துஇ அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் செர்க்கவாசிக ளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சரி' என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும் என்று கூறினார். அபபோது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுஇ தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா? என்று அந்த யூதர் கேட்டுவிட்டுஇ அவர்களின் குழம்பு பாலாம்'மற்றும் நூன்' என்றார். மக்கள் இது என்ன? என்று கேட்டார்கள். அந்த யூதர் (அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 6520

இறுதியாக சொர்கத்தில் நுழைபவர் இறைவனிடம் உரையாடும் சம்பவம்:

நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும்இ சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க் கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவேஇ அவர் திரும்பிவந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அவன் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில்இ உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு' அல்லது உலகத்தைப் போன்று பத்து மடங்கு' (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு என்று சொல்வான். அதற்கு அவர் அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?' அல்லது என்னை நகைக்கின்றாயா?' என்று கேட்பார்.
(இதைக் கூறிய போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 6571

மழைவேண்டி பிரார்த்தனை செய்த போது கடும் மழைபொழிந்து மக்கள் ஒதுங்கிய சம்பவம்:

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் மழை பெய்யாததை முறையிட்டனர். உடனே அவர்கள் மேடை ஏற்படுத்த உத்தரவிட்டார்கள். அதன் படி தொழும் திடலில் மேடை வைக்கப்பட்டது. மக்கள் (மழைத் தொழுகைக்கு) புறப்பட்டு வரவேண்டிய நாளை நிர்ணயித்தார்கள். அன்னை ஆயிஷா (ரலி) (தொடர்ந்து) அறிவிக்கின்றார். சூரியன் வெளிப்பட்டதும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து மிம்பரில் அமர்ந்தார்கள். தக்பீர் கூறி அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். பிறகு, ""உங்கள் நகரம் பஞ்சத்தால் வாடுவதையும், உரிய காலத்தில் மழை பெய்யாது (பிந்தி) விட்டதையும் நீங்கள் முறையிடுகின்றீர்கள். அல்லாஹ் உங்களை அவனிடமே பிரார்த்திக்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றான். மேலும் அவன் உங்களுடைய பிரார்த்தனையை ஏற்பதாகவும் உங்களுக்கு வாக்களித்து இருக்கின்றான்'' என்று கூறினார்கள். பிறகு, ""அகிலத்தாரையெல்லாம் படைத்து பரிபாலணம் செய்யும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் தீர்ப்பு நாளின் அதிபதி. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் தான் நாடியதையே செய்வான். யா அல்லாஹ்! நீதான் அல்லாஹ்! உன்னைத்தவிர வணங்கப்படுவதற்கு வேறு கடவுள் இல்லை. நீ தேவையற்றவன். நாங்கள் தேவையுள்ளவர்கள். எங்கள் மீது மழையை இறக்குவாயாக! நீ எங்களுக்கு இறக்கியதை வலிமையளிக்கக் கூடியதாகவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போதியதாகவும் ஆக்குவாயாக!'' என்று கூறினார்கள். பிறகு தனது இரு கைகளையும் உயர்த்தினார்கள். அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரிகின்றவரை விடாது கைகளை உயர்த்தினார்கள். பிறகு தனது முதுகை மக்கள் பக்கம் திருப்பிக் கொண்டு (கிப்லாவை முன்னோக்கி) தனது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். (தொடர்ந்து) கைகளை உயர்த்தி வைத்துக் கொண்டு தான் இருந்தார்கள். பிறகு மக்களை நோக்கினார்கள். பின்னர் கீழே இறங்கி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அல்லாஹ் மேகத்தை தோன்றக் செய்ததும் இடி இடித்து, மின்வெட்டி அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு மழை பெய்தது. தனது பள்ளிக்குள் (அவர்கள்) வந்திருக்கமாட்டார்கள். ஆனால் (அதற்குள்) மழை நீர் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. (மழைக்கு ஒதுங்குவதற்காக) மக்கள் வீடுகளை நோக்கி விரைவதை அவர்கள் கண்டதும் தனது கடைவாய்ப்பற்கள் தெரியும் வரை சிரித்தார்கள். பிறகு ""நிச்சயமாக அல்லாஹ் அனைத்திலும் ஆற்றல் பெற்றவன் என்றும் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது திருத்தூதராகவும் ஆவேன் என்றும் சாட்சி சொல்கின்றேன்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் : 1173

Wednesday, 9 May 2012

ஒரு தந்தையின் கடிதம்!

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!


தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

(இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்)

Thursday, 3 May 2012

கண்ணாடிகள் கவனம்!


நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.

பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தர வேண்டும். தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது கண்டிக்கவும் வேண்டும்.

தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் இளமைக்கால தூண்டுதலால் தானும் அதுபோல செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை வைத்துக்கொண்டே தொடர்நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப் பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார்? யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள் முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமா? என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். ‘படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் ‘கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. ‘கீழே விழுந்து விடக்கூடாது’ என்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும்.

குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம்.கண்ணாடிகள் கவனம்.

Wednesday, 2 May 2012

வை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா!


மடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வை-பை இல்லாமல் மடிக்கணனியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் வை-பையை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர மடிக்கணனிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது