சேலை அணிந்தால்,
காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!
.
பேன்ட் சட்டை அணிந்தால்,
உடலோடு ஒட்டிய ஆடை தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!
.
பாவாடை சட்டை அணிந்தால்,
கென்டைக்கால் தெரிந்தது தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!
.
முழுதாய் முக்காடிட்டால்,
கை விரலும் ,கால் விரலும் தெரிந்து தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!
.
பழங்காலம் போல் அடுப்படியிலேயே, பெண்ணை விட்டு வைத்தாலும்,
"பெண் என்பவளையே நான் பார்த்ததே இல்லை", அது தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாயோ ..?
.
உணர்வு தூண்டல்
உடை எம் தவறு எனில்
மன்னிப்பு கோருவேன்..!
.
வணங்கும் உடை ஒன்று சொல்...?
நான் தரிக்கிறேன்..!
அதை மீறி என்னை தப்பாக அர்த்தம் கொண்டால்,
என் தோல் உரிக்கிறேன் ..!
.
உணர்வுகளின் தூண்டல்
மனித இயல்பு
மறுக்கவில்லை நான் ..!
.
மனசு ஒன்று எனக்கும் உண்டு..!
மறுப்பாயா நீ..?
.
நான்
என் செய்தால்,
உன்னை ஈன்றவளுக்கு ஈடாய்
என்னை பார்ப்பாய் ஆண் மகனே..?
Friday, 22 December 2017
உடை எம் தவறு
Thursday, 21 December 2017
படித்ததில் பிடித்தது ...!
ஏ கடலே
அள்ள அள்ள
அளவில்லாமல்
கொடுத்தவளே-என்ன ஆனதடி உனக்கு ?
நேற்றுவரை தாலாட்டு பாடிய நீ -இன்று
ஏனடி முகாரியை
முர்க்கத்தனமாய்
பாடுகிறாய்?
அலைகளால் மணலை வாரி எங்கள் மீது
மூடுகிறாய்
உன்னைத் தாய்
என்று தானடி
சொன்னோம்-ஏனடி
பேயானாய்! பிஞ்சு
உயிர்களைத் தின்ற
பிசாசு ஆனாய்?உந்தன் உப்பை
தின்றதற்காகவா
எங்கள் ஊன் தின்றாய்
உயிர் தினறாய்
உடமைகள் தின்றாய்
பூமியின் மூன்று
பகுதிகளை முழுவதுமாக தின்றுமா உன் பசி
அடங்கவில்லை!
உன்னிடம் இருக்கும் உப்பு போதாதா?
எங்கள் கண்ணீரும்
சேர்ந்தா கரிக்க
வேண்டும்
எங்கள் உதிரம் குடித்தா-உன் உயரம்
வளர வேண்டும் தினம் தினம் சூரியனை விழுங்கிய சூடு தனிக்கவா
எங்கள் கிராமங்களின்
குருதி குடித்தாய்? இன்று...
உன்னுள் இருப்பது
தண்ணீர் இல்லையடி
எங்கள் கண்ணீர்
உன்னுடன்
காதல் கொண்டோம்
கவிதை கொண்டோம்
அதனாலா கண்ணீர்
கொள்கிறோம்
உன்னில்...
அமைதி வேண்டும்
அன்பு வேண்டும்
அணைப்பு வேண்டும்
ஏ கடலே...
Saturday, 23 March 2013
ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
பரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.
மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.
ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியல் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.
இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றக் கொள்ளவும் உதவுகிறது.
தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.
பால், தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். சைவ உணவுக்காரர்கள் பி12ஐ ஊசியாகப் போட்டுக் கொள்ளவும்.
அரிசி கோதுமை கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண் பெண்களையும் பரிசோதனை செய்து கண்டுபிடித்தன.
எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசி, பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
ஆரஞ்சு கொய்யா திராட்சை ஆப்பிள் வாழைப்பழம் முலாம்பழம் பேரீச்சம்பழம் காரட் அன்னாசி காலிபிளவர் முட்டைக்கோஸ் பசலைக்கீரை கொத்துமல்லி, முருங்கைக்கீரை பச்சைப் பட்டாணி பால் தயிர் ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.
இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்றுகின்றன. இதனால் ஞாபசக்தி அதிகரிக்கிறது.
குளுகோஸ் சாப்பிடுவது நன்று. இல்லையெனில் மாதம் ஒரு நாள் கோதுமை அல்வா சாப்பிடலாம். இதில் சோலைன் அதிகம் இருக்கிறது. ஆனால் முடிந்தவரை இயற்கை இனிப்புகளையே விரும்புங்கள். செயற்கை இனிப்புத் தேவை இல்லை. ஆக ஞாபகச் சக்தியையும் சிந்தனைத் தெளிவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் மூலம் எளிதில் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
Sunday, 28 October 2012
நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்
- SONY
- HP
- DELL
- SAMSUNG
- THOSHIBA
- LENOVA
- ACER
- Intel Core i7
- Intel Core i5
- Intel Core i3
- Windows 7 Ultimate
- Windows 7 Professional
- Windows 7 Home Premium
- Windows 7 Home Basic
- Windows 7 Starter version
Wednesday, 12 September 2012
நாளைய சிந்தனை
‘ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதே…! ‘ (அல்குர்ஆன் -(சூரத்துல் அன்பியா)21:35)
- மரணத்திற்கு முன் வாழ்வையும்,
- நோய்வருமுன் ஆரோக்கியத்தையும்,
- பணிச்சுமை வருமுன் ஓய்வையும்,
- வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும்,
- ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்ளுங்கள்
(அல் குர்ஆன் 41:30)
(அல் குர்ஆன்: 8:50)
(அல் குர்ஆன் 63:9,10)
(அல் குர்ஆன் 23:99-100)
(அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)
(அல்-குர்ஆன் 16:111)
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ : 1423)
- நீதியை நிலை நாட்டும் தலைவர்,
- அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,
- பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர்,
- அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,
- உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர்,
- தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,
- தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’
(அல்-குர்ஆன் 33:66)
மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.
- ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
- இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்பவன்.
- மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, ‘எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன்’ என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன்’ (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி விற்றவன்) ஆவான்.
Thursday, 19 July 2012
என்ன பதில்? ??
மனிதா!!
வாழப்பிறந்தவனா நீ?
கேள் உன் சிந்தனையிடம்.
என்ன பதில்?
காதல் கொண்டு மிதக்கிறாயா வானில்?
தேவையில்லை உன் கால்கள்
வெட்டி விடு அவற்றை-காதல்
உன்னை கைவிடும் வரை.
கோபம் கொண்டு கொதிக்கிறாயா?
சிந்தித்தாயா ஒன்றை
வானமும் பூமியும் நம்முடன் கோபம் கொண்டால்......
கண்கள் காட்டுகிறதா உன் கல்லரையை
பெருமை கொண்டு தலைக்கணமா உனக்கு?
மறந்து விட்டாயா வயிற்றில் நீ சுமக்கும்
மலத்தையும் சலத்தையும்
குனிந்து கொள் தலையை 2 கேவலம்
உன்னுல்லும் இருக்கிறது.
கொடுப்பதில்லையா நீ எவருக்கும்?
மடிந்து பார்
உன் செல்வங்கள் செலவழிக்கப்படும்
தோரனைகளை
பிறந்த மேனியாவே பிரிவாய்
எதற்கும் உபயோகம் இல்லாமல்.
பொறாமை உன் நெஞ்சை பிழிகிறதா?
திரும்பிப்பார் நீ வந்த வழிகளை
தெரிகிறதா உன் வாழ்வின் சுவடுகள்-தெரியாது
எரித்து விட்டது உன் பொறாமை அவைகளை
இப்போது சொல் என்ன பதில்?
Friday, 15 June 2012
மரணித்து விட்டது மனிதம்
மரணித்து விட்டது மனிதம்
காலத்தின் கட்டளைக்குள்
கட்டுண்டு போன நாம்,
அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம்.
எதற்காய் ஓடுகின்றோம்?
எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்
எதை நிலையாக ஓடுகின்றோம்?
நான்?
நீங்கள்?
நம் குடும்பம்?
மனித உயிர்?
பணம்?
பாசம்?
ஆசை?
காதல்?
இதில் எது நிலையானது?
வானம்?
அதில் தோன்றும் நிலவு?
கடலை பிழக்கும் சூரியன்?
ஓயாமல் அடிக்கும் அலை?
அந்த அலை தந்த நுரை?
இதில் எதை சொல்ல முடியும்
நிலையானது என்று?
பணத்தை நோக்கி ஒரு கூட்டம்,
பாசத்தை நோக்கி ஒரு கூட்டம்,
அறிவை தேடி ஒரு கூட்டம்,
ஆகாரத்தை தேடி ஒரு கூட்டம்..
இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது
நம் வாழ்வும் வாழ்நாளும்...
வாழப் பிறந்துவிட்ட மனிதனுக்கு
மரணம் மட்டுமே நிதர்சனம்.
மற்றவையெல்லாம் மாயமாய்
மறைந்து போகும் அதிசயம்.
என் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குச் சொல்லும் சேதி
தெரியுமா உங்களுக்கு?
"மரணத்தை சந்திக்க
நீ ஒரு வருடம்
முன் வந்து விட்டாய்" என்பதுதான்.
மாற்றம் மட்டும் அல்ல,
மரணமும் மாற்றா முடியாததுதான்...
நம் ஓடும் பாதையின் முடிவு மரணம்.
அதை மறந்து விட்டதால்தான்,
இன்று மரணித்து விட்டது மனிதம்.
மரணத்தை நினைப்போம்,
மனிதத்தை வளர்ப்போம்
Friday, 8 June 2012
$பாவங்களின் பரிகாரங்கள்!$
நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ நிறைய பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் மன்னிக்கப்படுதற்கான வழிமுறைகள், ஹதீஸ்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
$பிறர் குறைகளை மறைத்தல்!$
யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)
$சபையினில் ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாக!$
ஒரு சபையினில் பங்கெடுத்துவிட்டுக் கலையும் போது,
‘ஸூப்ஹானகல்லாஹூம்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’
பொருள் : அல்லாஹ்வே உன்னைப்புகழ்வதுடன் உனது தூய்மையை நான் துதிக்கின்றேன். உன்னைத்தவிர உண்மையில் வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகின்றேன். உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். உன் பக்கமே மீளுகின்றேன்’
என்று ஓதினால் அக்கூட்டத்தில் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (இறைவனால்) மன்னிக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)
$உளு வை முறையாகச் செய்வது!$
யார் உழுவை முறையாகச் செய்கின்றாரோ அவருடைய நகக்கண்கள் உட்பட அவரது உடம்பு முழுவதிலிருந்து பாவங்கள் வெளியேறி விடுகின்றன. (முஸ்லிம்)
சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கபட கடமையான தொழுகை
கடமையான தொழுகைக்கான நேரம் வந்ததும் யார் முறையாக உழு செய்து உள்ளச்சத்துடன் ஒழுங்காகத் தொழுகின்றாரோ அவருடைய அத்தொழுகை – அவர் பெரும்பாவங்கள் செய்யாதவரை – அவருடைய சிறிய பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரமாகிவிடும். அந்நிலை அவருடைய ஆயுள் முழுவதும் உண்டு. (முஸ்லிம்)
பாவம் போக்கும் ஐவேளைத் தொழுகை
“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)
$10 நாட்கள் செய்த பாவங்களைப். போக்கும் ஜூம்ஆத் தொழுகை!$
யார் முறையாக உழு செய்து ஜூம்ஆவுக்(காக பள்ளிக்)கு வந்து மௌனமாக இருந்து குத்பா – உரையைக் கேட்கின்றாரோ அவருடைய ஒரு ஜூம்ஆவுக்கும் மறு ஜூம்ஆவுக்கும் இடையேயான பாவங்களும் மேலும் அதிகப்படியான மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் (முஸ்லிம்)
$ஒரு வருட பாவங்களை போக்க ஆஷூரா நோன்பு!$
ஆஷூரா (முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11 ஆகிய) தினங்களில் நோன்பு நோற்பதன் மூலம் கடந்த ஒரு வருட (சிறிய) பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகிறேன். (முஸ்லிம்)
இரண்டு வருடங்கள் செய்த சிறிய பாவங்களைப் போக்கும் அரஃபா நோன்பு!
அரஃபா (துல்ஹஜ் பிறை 9 ஆம்) தினத்தில் நோன்பு நோற்பது கடந்த ஒரு வருடம் மற்றும் அடுத்த ஒரு வருட (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (முஸ்லிம்)
$பாவம் போக்கும் ஃநபில் தொழுகை!$
ஒரு முஸ்லிம் பாவம் செய்துவிட்டால் (அதை உணர்ந்து) உழுசெய்து சுத்தமாகி இரு ரக்அத்துகள் தொழுது மன்னிப்புக் கோரினால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான் (அபூதாவுத்)
$சிறிய முன்பாவங்கள் மன்னிக்கப்பட!$
உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ‘நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள் என்றார்கள்” என ஹும்ரான் அறிவித்தார். (புகாரி)
$முன்பாவங்களைப் போக்கும் ரமலான்!$
ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)
நடைபாதையில் உள்ள தடைகளை அகற்றினால்?
ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். (புகாரி)
$பிந்திய இரவில் பாவமன்னிப்பு வழங்கப்படும்!$
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான். (புகாரி)
$அன்று பிறந்த பாலகனைப்போல் பாவமற்றவராக ஆக!$
மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். (புகாரி)
$கடன்பட்டோருக்காக உதவுவதல்!$
யார் ஏழையின் (கடன்போன்ற) சிரமங்களை எளிதாக்கி உதவுகின்றாரோ அவருடைய இம்மை- மறுமை சிரமங்களை அல்லாஹ் எளிதாக்கிவிடுகின்றான். (முஸ்லிம்)
$பொறுமையுடன் இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்!$
ஒரு முஸ்லிமுக்கு நோய், வேதனை, துக்கம், கவலை, தொல்லை, துயரம் முதலான முள் குத்துவது உட்பட ஏதேனும் சோதனை நிகழ்ச்தால் அ(தனைப் பொறுத்துக் கொள்வ)தற்காக அவனுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (புகாரி)
$அல்லாஹ்விற்காக நோன்பு நோற்பது!$
யார் அல்லாஹ்வின் வழியில் ஒரு நாள் நோன்பிருக்கிறாரோ அந்த ஒருநாள் நோன்பிற்காக அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் நரகத்திலிருந்து தூரமாக்கி விடுகிறான். (புகாரி)
$பாவங்களை அழிக்கும் தர்மம்!$
தர்மம் பாவங்களை அழித்துவிடும். நீர் நெருப்பை அணைப்பதைப் போல. (திரிமிதீ)
$ஹஜ் மற்றும் உம்ரா – பாவங்களுக்கான சிறந்த பரிகாரங்கள்!$
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)
$கடல் நுரை போல உள்ள அதிகமான பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமானால்!$
‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! (புகாரி).
Abdul Hakkeem .R
Thursday, 7 June 2012
$ஜும்ஆ நாள்$
$நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள்$
"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: திர்மிதி 450
$நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்$
"இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகழவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414
$மறுமை நாள் நிகழக்கூடிய நாள்$
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்”
ஆதாரம்: முஸ்லிம்
$ஜுமுஆத் தொழுகை$
வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும்.
$நேரம்$
ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது.
சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 904
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது. அறிவிப்பவர்: ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 4168, முஸ்லிம் 1424
ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 940
ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரீ 939, முஸ்லிம் 1422
$ஜும்ஆ தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய சில சுன்னத்தான ஒழுங்கு முறைகள்$
$ஜுமுஆக்குக் குளிப்பது$
ஜுமுஆத் தொழுகைக்காக வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது கட்டாயக் கடமையாகும். தலைக்கு எண்ணெய் மற்றும் நறுமணமும் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டும்.
'உங்களில் எவரும் ஜுமுஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 894
'ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 895, முஸ்லிம் 1397
$பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது$
இந்த விஷயத்தில் மனிதர்கள் பொடுபோக்காக இருக்கின்றனர். இதற்கு மாற்றமாக திருமண வைபவங்களுக்கும், விழாக்களுக்குமாக அழகான ஆடைகளை அணிந்து செல்லக்கூடிய முஸ்லிம்கள் நபிகளார் காட்டித்தந்த வாராந்திர திருநாளாகிய வெள்ளிக்கிழமை தினத்தில் கவனமின்மையாக இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மெளனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்”
ஆதாரம்: அஹ்மத்
'ஜுமுஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பாரிஸீ (ரலி)
நூல்: புகாரீ 880
$ஜுமுஆ பாங்கு$
ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 916
உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும் (இப்னுமாஜா 1125)
உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக் கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.
ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்
$வியாபாரத்தை விட்டு விடுதல்$
ஜுமுஆ நாள் அன்று தொழுகை நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது. பாங்கு சொல்லப்பட்டு விட்டால் உடனடியாகத் தொழுகைக்கு விரைய வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9.
$குத்பாவிற்கு முன்பே வருதல்$
'ஜுமுஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும், அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 929, முஸ்லிம் 1416
நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.
$எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் நன்மை$
யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு,
நூல் : நஸயீ 1381
இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் "வாகனத்தில் வராமல்..." என்பதும் சேர்த்து அறிவிக்கப் பட்டுள்ளது.
$ஜுமுஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்$
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளார்கள்.
காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442
$ஜுமுஆத் தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்$
ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள். 1. பருவ வயதை அடையாதவர்கள். 2.பெண்கள் 3. நோயாளி 4. பயணி
'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: அபூதாவூத் 901
$குத்பாவின் போது பேசக் கூடாது$
ஜுமுஆத் தொழுகையில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பேசக் கூடாது.
'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு' என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 934, முஸ்லிம் 1404
ஓத வேண்டிய சூராக்கள்
முஸ்லிம் 1451, 1452, 1453
$ஜுமுஆவுடைய சுன்னத்$
ஜுமுஆத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் பயான் செய்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட வேண்டும்.
ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் 'நீர் தொழுது விட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். '(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: புகாரீ 931, முஸ்லிம் 1449
முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக 'அந்த இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழு!' என்று இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்குப் பின்னர் (வீட்டிற்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1462
'உங்களில் ஒருவர் ஜுமுஆத் தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1457
$பாவங்கள் மன்னிக்கப்படல்$
"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: முஸ்லிம் 342, திர்மிதி 198
"ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: முஸ்லிம்
இதே கருத்தில் அபூதாவூத் (939), அஹ்மத் (6707) ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸில், ஒன்றுக்குப் பத்து என்பதற்கு ஆதாரமாக,
"நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்" (அல்குர்ஆன் 6:160)
என்ற வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டியதாக இடம் பெற்றுள்ளது.
"ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 883
முஸ்லிமில் அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் ‘பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், ‘நல்லாடை அணிதல்’ என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.
$பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்$
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 935
$ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்கள்$
$கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதுதல்
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம்
$அதிகமாக ஸலவாத் ஓதுதல்$
உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல்: அபூதாவூத் 883
(குறிப்பு : நமது ஸலவாத், ஸலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. "நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
$அதிகமாக பிரார்த்தனை செய்ய வேண்டும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 935
$ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்$
இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 881
$நன்மைகளைப் பறித்து விடும் செயல்கள்$
$குத்பாவின் போது பேசக் கூடாது$
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 934
"யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: முஸ்லிம் 1419
''மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.
இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.
மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்இமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.
ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்" என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.''
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: அபூதாவூத் 939
$மனிதர்களின் பிடரியை கடந்து செல்வதை விட்டும், தொழுகையாளியை நோவினை செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்$
நபி (ஸல்) அவர்கள் பிரசங்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் மனிதர்களின் பிடரியை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். உடனே நபியவர்கள் அவரைப் பார்த்து “உக்கார்ந்து விடுங்கள். நிச்சயமாக நீங்கள் அவர்களை நோவினை செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத்
பெரும்பாலும் பள்ளிவாசலுக்கு பிந்திவருபவருக்கே இவ்வாரான சந்தர்ப்பம் நிகழும்.
$ஜும்ஆ தொழாதவருடைய நிலை$
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
''கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?" என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)" எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!" என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7:163,166)
இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.
$இதயங்கள் இறுகி விடும்$
"ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1432)
"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 460)
$இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்$
"ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1043)
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!
Wednesday, 6 June 2012
சொர்க்கம்
மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை..
தாயின் காலடியிலே சொர்க்கம்..
இது பெருமானாரின் கூற்று..
தாய் காட்டும் பாசமோ..
தெளிந்த நீர் ஊற்று..
உயிர்போகும் வலியினூடே எனை ஈன்றாள்..
என்முகம் பார்த்த அந்நொடிபொழுதில் அவ்வலி மறந்தாள்..
தன்னுயிர் பிணை வைத்து
என்னுயிர் ஈன்றவளை..
என் இன்னுயிர் உள்ளவரை..
ஒருபோதும் நான் மறவேன்..
சொன்னால் தான் தெரியும் பிறருக்கு நம் தேவை..
சொல்லாமலே புரியும் அவளுக்கு நம் பார்வை..
கருவறையில் நாம் அவளை எட்டி உதைத்த போதினிலும்..
கனிவுடனே கட்டி அணைத்து முத்தமழை பொழிவாளே..
ஒரு கவள உணவாயினும்..
தான் உண்ணா.. நமக்களித்து..
அகமகிழும் அற்புத ஜீவன் அவள்..
நாம் உச்சரித்த வார்த்தைகளில்
முதல் வார்த்தை அம்மா..
அந்த அன்னையின் அருமை சொல்லி மாளா..
பெருமைகள் எண்ணிளடங்கா..
எழுத இக்கவிதை போதா..
சிந்தனைக்கு சிலவற்றை..
உதிர்க்கின்றேன் உதாரணமாய்..
அவள் உள்ளத்து வெண்மை..
வெண்மையில் தெரியும் மென்மை..
மென்மைக்கு இலக்கணமான பெண்மை..
பெண்மைக்கு பெருமை சேர்க்கும் தாய்மை..
அத்-தாய்மை ஈன்ற மகவு..
அதனால் ஏற்பட்ட உறவு..
அவ்வுறவினால் அடைந்த உவகை..
அவளின் அளப்பறிய பாசம்..
அவள் காட்டிய பரிவு..
அன்னையின் கருணை..
அவள் சொல்லில் தெரியும் கனிவு..
பாலோடு அவள் சேர்தூட்டிய வீரம்..
அவ்வீரத்தினால் நாம் செய்த தீரம்..
அவள் புகட்டிய கல்வி..
அக்கல்வியினால் நாம் பெற்ற அறிவு..
அறிவினால் வளர்ந்த திறமை..
அத்திறமையினால் விளைந்த வெற்றி..
அதைக் கண்டு அவள் அடைந்த பெருமை..
அப்போது அவள் விழியில் அரும்பிய ஈரம்..
இதற்கு உண்டோ பேரம்??
நிகரில்லா அவளின் அன்பு..
அதுவே அவளின் உயரிய பண்பு..
மொத்தத்தில்..
நமக்காகவே உருகும் அவளின் வாழ்வு..
அவளாலே நமக்கு உண்டு மீள்வு..
அன்னைக்கு நாம்பட்ட கடன் என்ன?
அவளுக்கு செய்ய வேண்டி கடமை என்ன?
எண்ணி எண்ணி பார்த்து விட்டேன்..
எண்ண எண்கள் போதவில்லை..
கணக்கிட்டு பார்த்து விட்டேன்..
கண்களிலே கண்ணீர் மழை..
நம் கடமையில் நாம் காட்டவேண்டும் உறுதி..
அதற்கு நாம் கொடுத்து உழைக்க வேண்டும் குருதி..
ஈரைந்து மாதங்கள் அவள் நமைச் சுமந்தாளே!
ஈடேற்றம் பெறுவோமே.. நாம் அவளைச் சுமந்தாலே!
தாயின் காலடியிலே சொர்க்கம்..
இதை தக்க வைத்து கொள்வோமா..தினம் தினமும்???
Monday, 4 June 2012
யார் பைத்தியம்....????????
சாலையின் நடுவே போகிறான் பார்
அவன்தான் என்றான் ஒருவன் ...
எதிர்வரும் வாகனம் கண்டும்
நிற்காமல் நடை போடுகிறானே
அவன்தான் என்றான் இன்னொருவன் ..
யார் பைத்தியம் ???
முற்றும் துறந்த முனிவனை போல்
உள்ளானே அவனா பைத்தியம் ???
எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறானே
அவனா பைத்தியம் ???
சொந்தங்களையும் சோகங்களையும்
கடந்து போகிறானே
அவனா பைத்தியம் ???
மூளையின் உதவியின்றி முன்னேறி செல்கிறானே
அவனா பைத்தியம் ???
தேவைக்கும் அதிகமாய் பணம் சேர்ப்பவன்
முதலாளி !!!
போலி வேடமிட்டு மக்களிடம்
பணம் பறிப்பவன் சாமியார் !!!
மக்களின் தேவையை புறந்தள்ளி
பதவியில் இருப்பவன்
அரசியல்வாதி !!!
சுயநலம் கொண்ட தீயோரை
ஆட்சியில் அமர்த்துவோர் வாக்காளர் !!!
அரசியல் சாக்கடை என்றே
புறந்தள்ளுவோர் இளைஞர் !!!
இவர்கள் எல்லாம் பைத்தியமில்லையா ???
வாழ்க்கையின் எண்ணங்களுக்கு
விடை கொடுத்தவன் தான் பைத்தியமா ???
முடிகின்ற வாழ்வில் முடிவில்லா ஒன்றை
தேடி போகிறான்
என்னவென்று தெரியாமலே !!!
இவன் போன்றோர் இந்த பூமியிலே
எத்தனை பேர் ???
சக மனிதனை நேசிப்போம்...
இவன் கடவுளின் குழந்தை
இவன் வாழ்க்கை
வாழ்வியல் நெறிகளுக்கு
அப்பாற்பட்டது ...
(தனி மனிதனிடம் அன்பு காட்டுவோம் ... கொடுக்க என்றுமே குறையாத அன்பினை எல்லாருக்கும் கொடுப்போம் ...இது போன்ற மனிதர்களின் நிலைக்கு இந்த சமுதாய அமைப்பும் நாமுமே காரணம்
அவர்களை போன்றோர் உருவாகாமல் தடுப்போம் ...புதியதோர் உலகம் செய்வோம் )
Wednesday, 30 May 2012
டெங்கு காய்ச்சல்
முதலில் டெங்கு காய்ச்சல் அறிகுறி
1 . டெங்கு கொசு கடித்தவுடன் உடல் முழுவதும் சிகப்பு புள்ளிகள் ஏற்படலாம் .
2 . தொடர்ச்சியான இருமல் வரலாம்.
3 . சிறுநீர் கழிக்கும் போது அல்லது உடலில் எந்த பகுதியில் இருந்தேனும் ரெத்த கசிவு ஏற்படலாம்.
4 கைகால் சோர்வு, உடல் முழுவதும் வலி ஏற்படலாம்.
இவை அனைத்தும் டெங்கு கொசு கடித்த 4 நாட்களில் தெரிய வரும் ....கவனமாக இருந்தால் வியாதி தீரும் இல்லையேல் ஆளை தீர்த்துவிடும்.
"வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்"
டெங்கு கொசு adc வகையை சார்ந்தது இது நல்ல தண்ணீரில் மட்டும் முட்டை விடும் ....ஆகையால் .
வீட்டில் அங்ஙனம் மற்ற பகுதியில் உள்ள கட்டி கிடக்கும் நல்ல தண்ணீர் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் ...
வீட்டில் வாசல் பகுதியில் தண்ணீர் கட்டி கிடந்தால், துப்புரவு பணியாளர் வரும் வரை காத்திருக்காமல் நாமே சுத்தம் செய்வது நல்லது.
"காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்"
டெங்கு காய்ச்சல் இருமலினால் பரவும் காய்ச்சல் அல்ல இது ஒரு வகை கொசு கடிப்பதினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல்தான். இது வந்த வுடன் 4 நாட்களில் நமக்கு தெரிந்து விடும் ,மேலே கூறிய அறிகுறிகள் போன்று. இதில் ஒரு விஷயம் என்ன வென்றால் இதற்க்கு தடுப்பு ஊசி கிடையாது ஆனால் மருந்துகள் உள்ளன ...எக்காரணம் கொண்டும் நாமாக சென்று மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்து உட்கொள்ள கூடாது ....அப்படி செய்தால் நம் உயிரை நீங்கள் உட்கொளும் இரு மாத்திரையில், இரு வாரத்தில் உங்கள் உயிரை அது உட்ட்கொள்ளும் .. ஆகையால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று காண்பிக்க வேண்டும்.
அவர்கள் உடனே உங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்பார்கள் (platelets ) .என்று சொல்ல கூடிய வெள்ளை அணுக்களை தின்று விடும் .10 நாட்களில் .பின்பு நுரையிரல் , கிட்னி மற்றும் உடலில் பிற பகுதிகள் செய்யல இழந்து விடும் ......இல்லையேல் இரு வாரத்தில் நமது உயிரை குடித்து விடும் ...
"காய்ச்சல் வந்தாலும் , வருவதற்கு முன்பும் என்ன உணவு உட்கொள்ளலாம்"
1 இளநீர் 2 . கஞ்சி 3 . தண்ணீர் சத்து மிகுந்த பானங்கள்
4 உப்பு கரைசல்
இதை நான் சொல்வதற்கு காரணம் ... எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மற்றும் அருகில் உள்ள ஊரான கடையம் , தென்காசி போன்ற ஊர்களில் பரவி இது வரை 33 பேர் இறந்து உள்ளனர் இவர்கள் சரியான நேரத்தில் காண்பிக்க தவறி இருக்கலாம் இல்லையேல் நோய் முற்றிய பிறகு காண்பித்து இருக்கலாம். இந்த இறப்பில் சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அடங்குவர் ...
மேலும் இந்த டெங்கு காய்ச்சல் மதுரை மற்றும் மெட்ராஸ் பகுதியில் பரவி வருவதாக கூறி வருகின்றனர் ...இது இருமல் போல பரவும் காய்ச்சல் அல்ல ...மக்கள் டெங்கு கொசு வராமல் தடுத்து உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது.
"ஒரு எச்சரிக்கை" "அறியாமையால் வந்த தவறு"
கொசுவை ஒளிபதற்காக நகராட்சியில் கொடுக்கும் போது இந்த மருந்து கொசு மற்றும் பூச்சிகளை கொள்ளும் என்று ஒரு பாட்டிலில் கொடுத்து உள்ளார்கள் அதாவது தண்ணீர் தொட்டியில் ஊற்றுவதற்கு .. இதை வாங்கி வைத்த ஒரு அம்மா தன மகளுக்கு பூச்சி கடிக்கிறது என்று கூறவும் அந்த அம்மாவுக்கு வாங்கி வைத்த மருந்தின் ஞாபகம் வரவே அதை அறியாமையால் கொடுத்துள்ளார் பின்பு அக்குழந்தையை மிகவும் சிரம பட்டு காப்பற்றினார்கள் .....அதற்க்கு பின்புதான் கொடுக்கும் கொசு மருந்தை நகராட்சி நிர்வாகமே அனைத்து வீட்டு தண்ணீர் தொட்டிகளிலும் நேரடியாக ஊற்றி வந்தது என்பது குறுப்பிட தோன்றியது
நண்பர்களே , மக்களே இது போன்ற அறிகுறி உங்கள் பகுதியில் இருந்தால் இல்லை காய்ச்சல் வந்தால் இந்த நிகழ்வுகளை கூறுங்கள் ...
நன்றி ... நன்றி .... நன்றி !
என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மட்டும் ஒரு "விழிபுனர்வுக்காக"
... . .
கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்
கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?
கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.
1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
எதற்கும் யார் பொறுப்பு?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்
பத்து கட்டளைகள்
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.





